பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

梁 48 零 இராமலிங்க அடிகள் சொல்லுக்குரிய பொருள் என்பது பேராசிரியர் கருத்தா தல் தெளியப்பெறும். செல்வக் களிப்பால் மையலுறா மலும் வறுமைத் துன்ப மிகுதியால் சோர்வுறாமலும், இன்ப - துன்பம் இரண்டையும் ஒப்பக் கருதுவோராய் திருத்தகவிற்றாய் உள்ள திருவுள்ளம் கொண்டவர்களே சான்றோர்கள். கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்’, 'திருநின்ற செம்மையே செம்மையாகக் கொண்டார்’ எனப் போற்றப் பெறுபவர்கள். திருத்தகவிற்றாய உள் ளத்தையும் திருநின்ற செம்மையையும் தந்து சென் றடையாத திருவுடையானாகிய இறைவனது திருவருள் இன்பத்தைக் கொடுக்கும் நூல்களே திருவுடைய நூல் கள். இத்தகைய நூல்களில் திருவருட்ப ஒன்று ஒப்பு யாவறறதுமாகும. - - அடிகளின் அருளிச் செயல்கட்குத் திருவருட்டா' என்று திருநாமம் இட்டவர். அடிகளின் மாணாக்கரும், திருவருட்டாவைத் திருமுறைகளாக வகுத்தவரும் ஆகிய உபயகலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலா யுத முதலியார். அடிகளாரது அருட்பாடல்கள் திருவருட் பா எனப் பெயர் பெற்றமையை வேலாயுதனார் தாம் பாடிய 'திருவருட்டா வரலாறு' என்பதிலுள்ள, ஆயஅருள் இறைஎங்கள் அருட்பிரகா சப்பெருமான் தூயஅரு எால்பொழிந்த சொல்அமிழ்தாம் சொற்பெருக்கு நேயஅருட் பற்றாகி . . . . நிறைமனத்துப் பெரியர்களும் மாயமயக் குழல்என்போல் மறவர்க்கும் உள்ளுருக்கி, (34)