பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் திருமுறையின் பாடல்கள் 豪。51。德 உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க உய்கின்ற நான்எந்தநாள் தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தன்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே (1) என்பது முதல் பாடல். இந்தப் பாடலில் அடிகளார் திருவாக்கில் முதன் முதலில் பிறந்த தொடர் திருஓங்கு' என்பதே. அடிகளால் 'திருஓங்கு' என்று தொடங்கி பாடப்பட்ட பின்னரே கந்தகோட்டம் விளக்கம் பெற் றது. கந்தகோட்டத்துக்கு இன்றுள்ள பேரும் புகழும் பொருளும் அன்றில்லை. அடிகளால் பாடப்பெற்ற பின்னரே 'அது பொன்னும் மணியும் நவமணியும் கொழிக்கும் செல்வத்திருக்கோட்டமாகத் திகழ்கின்றது என்பர் என மணி. திருநாவுக்கரசு முதலியார் எழுதுவர். 'கந்தசாமி கோயில்’ என்று வழங்கப்பெற்ற அதனைக் 'கந்தகோட்டம்' என வழங்கத் தொடங்கியவர் அடி களே. இந்தப் பதிகத்தில் மக்கள் வாயில் அதிகமாகத் தாண்டவமாகி மிகு புகழ் பெற்ற பாடல் இப்பதிகத்தின் எட்டாவது பாடலாகும். அது இது: ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும் உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவுகல வாமைவேண்டும் பெருமைபெறு நினதுடிகழ் பேசவேண் டும்பொய்மை பேசா திருக்கவேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய் பிடியா திருக்கவேண்டும் 1. காஞ்சியில் 'குமரகோட்டம் இதனையொட்டியே அவ்வாறு வழங்கப்பெற்ற தாகக் கருதலாம்.