பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

等 52 象 இராமலிங்க அடிகள் மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை மறவா திருக்கவேண்டும் மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வில்நான் வாழவேண்டும் தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்.ஒங்கு கந்தவேளே தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே (8) இஃது இப்பதிகத்தின் எட்டாம் பாடல். வைணவ மந்திரத் தில் எட்டெழுத்து மந்திரம்போல் எட்டாவதாக அமைந்தி ருப்பதாகக் கருதலாம். இதில் பொதிந்துள்ள கருத்துகள் பொதுவானவை; எல்லா சமயத்தினரும் ஏற்றுக் கொள் ளக் கூடியவை. மதத்தைப் பேய் என்கின்றார் அடிகள். தந்தை பெரியார். அவர்களும் இதனையே பிறிதொரு கோணத்தில் சொல்லி வந்தார்கள். இளைஞர் உலகம் இவற்றைக் கருத்தில் கொண்டால் வருங்கால உலகம் சீர்பட்டு சிறப்புற்று உய்ய வழி உண்டு." இப்பதிகத்தில் பாடல்கள் யாவும் ...சென்னையில் கந்தகோட் டத்துள் வளர் தலம்.ஒங்கு கந்தவேளே தன்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே என்ற அடிகளால் இறுகின்றன. அஃதாவது 31 முறை இறைவனை விளித்து வேண்டுகின்றார். நாமும் இவ் வாறே வேண்டி உய்வோம். 2. கந்தர் சரணப் பத்து: இப்பதிகம் பத்துப் பாடல் களைக் கொண்டது. பாடல்கள் யாவும் எண்சீர்க் கழிநெடி 2. இந்தப் பாடல் என் இளமை காலத்தே என் உள்ளத்தைக் கவர்ந்தது. இதன்படி ஒழுகி வருகிறேன். என்னுடைய 81ஆம் பிறந்த நாளை இவன் சந்நிதியி லேயே நண்பர்கள் சூழக் கொண்டாடினேன். (நாள்: ஆகஸ்டு 18, 1998)