பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் திருமுறையின் பாடல்கள் * 57。醬 தீராத துயர்க்கடலில் அழிந்து நாளும் தியங்கிஅழு தேங்கும்.இந்தச் சேய்க்கு நீகண் பாராத செயல்என்னே எந்தாய் எந்தாய் பாவிஎன விட்டனையோ பன்னனா லாக எராய அருள்தருவாய் என்ற்ே ஏமாந்து இருந்தேனே என்செய்கேன் யாரும் இல்லேன் சிாரும் தணிகைவரை அமுதே ஆதி தெய்வமே நின்கருத்தைத் தெளிந்தி லேனே (2) வாய்க்கும்உன தருள்என்றே அந்தோ நாளும் வழிபார்த்திங் கிளைக்கின்றேன் வருத்தும் பொல்லா நோய்க்கும்.உறுதுயர்க்கும்இலக் கானேன் மாழ்கி நொந்தேன்நின் அருள்காணேன் துவலும் பாசத் தேய்க்கும்.அவன் வரில்அவனுக் கியாது சொல்வேன் என்செய்கேன் துணைஅறியா ஏழை யேனே துய்க்குமர குருவேதென் தணிகை மேவும் சோதியே இரங்காயோ தொழும்பா ளர்க்கே (6) அண்ணாவே நின்அடியை அன்றி வேறோர் ஆதரவிங் கறியேன்நெஞ் சழிந்து துன்பால் புண்ணாவேன் தன்னை இன்னும் வஞ்சர் பாற்போய்ப் புலந்துமுக வாட்டம்உடன் புலம்பி நிற்கப் பண்ணாதே யாவன்.இவன் பாவிக் குள்ளும் படுபாவி என்றென்னைப் பரிந்து தள்ள எண்ணாதே யான்மிகவும் ஏழை கண்டாய் இசைக்கரிய தணிகையில்விற் றிருக்கும் கோவே (9) பாடல்கள் யாவும் நெஞ்சை நெக்குருகச் செய்பவை. குறையொன்றுமில்லா தம்மைக் குறைகளின் களஞ்சிய மாகக் கூறிக் கொள்ளுவது கைச்சியாதுசந்தானம்'. நம் மாழ்வாரைப் போல் - மணிவாசகப் பெருமானைப் போல் - இப்பெருமானும் தம்மைத் தாழ்த்திப் பேசுகி றார். அப்படிப் பேசிக் குறையிரக்கின்றார்.