பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் திருமுறையின் பாடல்கள் 案 61 豪 கண்ணைக் காட்டி இருமுலை காட்டிமோ கத்தைக் காட்டி அகந்தைக் கொண்டேஅழி மண்ணைக் காட்டிடும் மாய வனிதைமார் மாலைப் போக்கிநின் காலைப் பணிவனோ பண்ணைக் காட்டி உருகும்.அ டியர்தம் பக்திக் காட்டிமுத் திப்பொருள் ஈதென விண்னைக் காட்டும் திருத்தணி காசல வேல னேஉமை யாள்அருள் பாலனே. (8) அருமையான பாடல்களாயினும் பெண் சமூகத்தை இழிவுபடுத்திப் பேசும் பாங்கு நமக்கு மிக்க வருத்தத் தைத் தருகின்றது. அடிகளாரின் வாழ்க்கையில் எந்தப் பெண்ணும் அவரை மயக்கியதில்லை. அடிகளாரும் சிற்றின்பத்தை வெறுத்தொதுக்கியவர். பெண்களுக்கு அழகு இறைவனால் நல்கப்பட்டது. வமிசம் தழைப்ப தற்காக ஆணைக் கவர்வதற்கு இந்த ஏற்பாடு. இதனை ஆழ்ந்து நோக்கினால் பெண்ணினத்தைக் குறைத்துப் பேசுவதற்கு வாய்ப்பு ஏற்படாது. பெரும்பாலான ஆண் புலவர்கள்தாம் இங்ங்னம் பாடுகின்றனர். பெண் பாற் புலவர்கள் ஆண்களின் அட்டுழியத்தைப் பாடத் தொடங்கிவிட்டார்களானால், ஆணுலகம் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது. நாய், காளை, மனிதன் இவர்களைக் கவனித்தால் ஆண் வர்க்கமே பெண் இனத்தைத் துரத்துவதைக் காண முடிகின்றது. ஒரு பெண் நாய், ஒரு பசு, ஒரு பெண் ஆண் வர்க்கத்தைத் துரத்துவதைக் காண முடிவதில்லை. இறைவனது படைப்பிலேயே பெண்ணுக்கு ஆசை கட்டுப்பாட்டில் இருக்குமாறு அமைந்துள்ளது. மயங்கிச் செயலில் ஈடு பட்டால் விளைவு உடனே செயலைப் பறையறைவிக் கும். இதனால் இறைவனே இச்சையை அடக்கிச் செயற் படும் ஆற்றலைப் பெண்ணுக்கு நல்கியுள்ளான். பெண் னினத்தை இழிவுபடுத்திப் பேசும் அடிகளாரின் போக்கு சிந்திக்கும் அறிஞர்கட்கு உகந்ததாக இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க நிலையாகும்.