பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் திருமுறையின் பாடல்கள் * 63 緣 கல்லாக் கொடிய மடவார்தம் காமக் குழிக்கண் வீழாமே நல்லார்க் கெல்லாம் நல்லவநின் நாமம் துதிக்கும் நலம்பெறவே சொல்லாற் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை தனைத்துதிக்க வல்லார்க் கருளும் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே (8) 23. காணாப் பத்து: அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பாலான பத்துப் பாடல்களைக் கொண்ட இப்பதிகம் அடிகள் இறைவனைக் கானா நிலையைக் கழறுவது. எல்லாப் பர்டல்களும் ‘கண்கள் ஆரக் கண் டிலனே' என்று இறுவன. இரண்டு பாடல்களைக் காட்டுவேன். உருத்துள் இகலும குர்முதலை ஒழித்து வானத் தொண்பதியைத் திருத்தும் அரைசே தென்தணிகைத் தெய்வ மணியே சிவஞானம் அருத்தும் நினது திருவருள்கொண்டு ஆடிப் பாடி அன்பதனால் கருத்துள் உருகி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே. (3) விரைவாய் கடப்பந் தார்அணிந்து விளங்கும் புயனே வேலோனே தரைவாய் தவத்தால் தணிகைஅமர் தருமக் கடலே தனிஅடியேன் நிரைவாய் சனனக் கடல்படிந்தே தயங்கி அலைந்தேன் சிவஞானக் கரைவாய் ஏறி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே (8) இப்பாடல்களில் அடிகளின் ஆற்றாமை பளிச்சிடுகின் p莎理·