பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல், திருமுறையின் பாடல்கள் * 65 够 ஆவி யே.எனை ஆள்குரு வடிவமே ஆனந்தப் பெருவாழ்வே வாவி ஏர்தரும் தணிகமா . மலைமிசை மன்னிய அருள்தேனே (5) தொண்ட னேன்இன்னும் எத்தனை நாள்செலும் துயர்க்கடல் விடுத்தேற அண்ட னேஅண்டர்க் கருள்தரும் பரசிவன் அருளிய பெருவாழ்வே கண்ட னேகர்வந் தனைசெய அசுரனைக் களைந்தருள் கலைகண்ணே விண்ட னேர்புகுஞ் சிகரிசூழ் தணிகையில் விளங்கிய வேலோனே (7) அடிகளாரின் ஏக்கநிலையைப் பாடல்களில் கான முடிகின்றது. எத்தனை நாள் செலும்’ என்ற சொற்றொ டர் பாடல்தோறும் தலைகாட்டி இதனைத் தெரிவிக்கின் றது. 50. சண்முகர் கொம்மி: தாழிசையால் அமைந்த பதினைந்து பாடல்களைக் கொண்டது இப்பதிகம். இதில் மூன்று பாடல்கள்: குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக் கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி துறவர் வணங்கும் புகழாண்டி - அவன் தோற்றத்தைப் பாடி அடியுங்கடி (1) வேங்கை மரமாகி நின்றாண்டி - வந்த வேடர் தமைஎலாம் வென்றாண்டி தீங்குசெய் சூரனைக் கொன்றாண்டி - அந்தத் தீரனைப் பாடி அடியுங்கடி (4) வேதமுடி சொல்லும் நாதனடி - சதுர் வேதமு டிதிகழ் பாதனடி இராம.-6