பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 繼 75 拳 வஞ்ச மடவார் மயலொருபால் மணியே நின்னை வழுத்தாத நஞ்சம் அனையார் சார்பொருபால் நலியும் வாழ்க்கைத் துயர்ஒருபால் விஞ்சும் நினது திருவருளை மேவா துழலும் மிடிஒருபால் எஞ்சல் இலவாய் அலைக்கின்ற தென்செய் கேன்.இவ் எளியேனே (10) தம்மை நல்வழியில் உய்விக்குமாறு விண்ணப்பிப் பதைப் பாடல்களில் கண்டு மகிழலாம். . 6. அச்சத்திரங்கல்: இதில் வரும் பாடல்கள் 'கோ யில்’ என வழங்கும் திருத்தில்லையைப் பற்றியவை. எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் எழுந் தவை. துறையிடும் கங்கைச் செழுஞ்சடைக் கனியே சுயம்பிர காசமே அமுதில் கரையிடும் கண்டத் தொரு பெருங் கருனைக் கடவுளே கண்ணுதற் கரும்பே குறையிடும் குணத்தால் கொடியனேன். எனினும் கொடுந்துய ரால்அலைந் தையா முறையிடு கின்றேன் அருள்தரா தென்னை மூடன்என் றிகழ்வது முறையோ (1) ஆண்டநின் கருனைக் கடலிடை ஒருசிற் றணுத்துணைத் திவலையே எனினும் ஈண்டஎன் தலைமேல் தெறிந்தியேல் உய்வேன் இல்லையேல் என்செய்கேன் எளியேன் நீண்டவன் அயன்மற் றேனைவா னவர்கள் நினைப்பரும் நிலைமையை அன்பர் வேண்டினும் வேண்டா விடினும்ஆங் களிக்கும் விமலனே விடைப்பெரு மானே (4)