பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 餐 81 象 சசிஎ டுக்குநல் ஒற்றியூர்ச் செல்வத் தந்தை யார்அடிச் சரண்புக லாமே (10) என்பவை இப்பதிகத்தில் மூன்று பாடல்கள். ஒவ்வொரு பாடலிலும் அடிகள் நெஞ்சை நெஞ்சமே!’ என விளித்து தந்தையார் அடிச் சரண் புகலாமே என்று தம்முடன் வந்து சரண்புகுமாறு கேட்பது நம்போலியர் அனைவரையும் அழைப்பதைப் போன்ற உணர்வைப் பெறுகின்றோம். 21. அருள் நாம விளக்கம் இதுவும் திருஒற்றியூர்ப் பதிகமே. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப் பால் அமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் 'நமசிவசண்முகசிவஓம்’ என்னும் மந்திரத்தையும் 'ஓம் நமச்சிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரதையும் உன்னுமாறு மனத்தை ஆற்றுப்படுத்தித் தம்முடன் ஒற்றியூர் வருமாறு அழைக்கின்றார் அடிகள். வாங்கு வில்நுதல் மங்கையர் வழியால் மயங்கி வஞ்சர்பால் வருந்தி நாள்தோறும் ஏங்கு கின்றதில் என்பயன் கண்டாய் எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து தேங்கு லாவுசெங் கரும்பினும் இனிதாய்த் தித்தித் தன்பர்தம் சித்தத்துள் ஊறி ஓங்கும் ஓம்சிவ சண்முக சிவஓம் ஒம்சி வாயஎன்றுன்னுதி மன்னே (1) நண்ணும் மங்கையர் புழுமலக் குழியில் நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய் எண்ணும் என்மொழி குருமொழி ஆக எண்ணி ஒற்றியூர்க் கென்னுடன் போந்து பண்ணும் இன்சுவை அமுதினும் இனிதாய்ப் பத்தர் நாள்தொறும் சித்தமுள்ளுற உண்ணும் ஒம்சிவ சண்முக சிவஒம் ஓம்சி வாயஎன்றுன்னுதி மனனே. (7) இராம.-?