பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குலஞ்செய்த ... ... ... தேடிக் கொண்டான் 83 எத்தகையவனாக இருக்கவேண்டும் என்று நினைக்க வில்லை. அதற்குப் பதிலாகக் கலுழனை இழித்துப் பேசுகிறான். வன்மையற்ற ஒருவன், எய்தவன் இருக்க அம்பை நோவது போல, இராவணன் கலுழனை இழித்துப் பேசுகிறான்; அங்ங்னம் பேசுகையிலும் வெறுப்போடு கலந்த நகைச் சுவை அமையப் பேசுகிறான். ஏத்தருந் தடந்தோள் ஆற்றல் என்மகன் எய்த பாசம் காற்றிடைக் கழித்துத் தீர்த்தான் கலுழனாம் காண்மின் . காண்மின் ! வார்த்தைஈ தாயின் நன்றால் இராவணன் வாழ்ந்த வாழ்க்கை மூத்தது கொள்கை போலாம் என்னுடை முயற்சி எல்லாம். (கம்பன் - 8.297) இப்பாடலில் இராவணன் வழக்கமாகப் பேசும் பெருமிதத்திற்குப் பதிலாக ஆழமான அவலச் சுவை இருப்பதைக் சாணலாம். மேகநாதன் மாட்டு அவன் அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தான். அவ்வரிய வீரனது சிறந்த படைக்கலம் பயனற்றுப் போயின மையாலும், மேகநாதனே பகைவர்களது வன்மையைப் பற்றிப் பேசிய பேச்சுக்களாலும், ஒரு சிறிது போரின் முடிவைப்பற்றி இராவணன் கொண்டிருந்த நம்பிக்கை தளர்ந்துவிட்டது. அத்தளர்ச்சி இன்னும் முற்றிலும் வெளிப்படவில்லை. அறிவுடைய ஒருவன் தன் உணர்ச்சிகளை அடக்கி ஆளுவது போல அவனும் தனது ஆழ்ந்த வருத்தத்தை மறைத்து, "கழித்துத் தீர்த்தான் கலுழனாம் காண்மின் காண்மின்!” என்று கூறி ஓரளவு அவ்வருத்தத்தை நகையாக மாற்றி விடுகிறான்; அடுத்து இந்நிலையிலிருந்து சிறிது தாழ்ந்து விடுகிறான். "திருமாலை யான் துரத்தியபொழுதும், அவன், . -