பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குலஞ்செய்த ... ... ... தேடிக் கொண்டான்' 91 விரைவாகக் கூறிவிட்டான். முதலாவதாகத் தன்னைக் கோழையெனத் தந்தை எங்கே மதித்துவிடுவானோ என்று மறுகி, ஆதலான் அஞ்சி னேன்என்று அருளலை; ஆசை தான்.அச் சீதைபால் விடுதி யாயின் அனையவர் சீற்றநந் தீர்வர்; போதலும் புரிவர்; செய்த தீமையும் பொறுப்பர்; உன்மேல் காதலால் உரைத்தேன் என்றான் உலகெலாம் கலக்கி வென்றான் (கம்பன் - 9121) இத்தகைய அறவுரையை இராவணனுக்கீந்தவர் மூவர். மூவரும், அவன் செய்த தவற்றை நன்கு அறிவர். மூவரும், குலத்துக்கு வரும் பழியை உணர்ந்தவர். மூவரும், புகழையே பெரிதும் விரும்புபவர். மூவரும் இராவணன் நலத்தில் கருத்துடையவர். ஆனாலும், என்ன வேற்றுமை! இருவர் மேற்கொண்ட வழி ஒன்று. கும்பகருணனும், மைந்தன் மேகநாதனும் மேற்கூறிய அனைத்தையும் அறிவர். ஆனால், இறுதியாக, மேற் கொண்ட கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணமே அவர்களை உந்திற்று. கருத்திலா இறைவன் தீமை கருதினால் அதனைக் காத்துத் திருத்தலா மாகின் அன்றோ திருத்தலாம் தீரா தாயின் பொருத்துறு பொருள் உண்டாமோ? பொருதொழிற்கு உரிய ராகி ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க் குரிய தம்மா! (கம்பன் - 7428) இங்ங்னம் கூறினவன் கும்பகருணன். இறுதியாக அவனும் இராவணனுக்கு வேண்டுமான அளவு நீதி வழங்கினான்; வெற்றியில்லை என்பதைப் பல வழியிலும் எடுத்துக் காட்டினான். ஆனால், தமையன்