பக்கம்:இராவண காவியம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இராவண காவியம் 43. 42. இம்மென வொலிபட விழியு நீர்த்திரள் செம்மலைக் கண்டுளஞ் சிறப்புத் தன்னெழில் பொம்மலுற் றினிதினிற் பொலியப் போர்த்திடும் அம்மலை மகளின்மே லாடை மா னுமே. துன் றறை வீழ்ந்துறத் துவளு நீர்த்தொடர் குன்றவர் தம்மிளங் கொடிக்கு நன்றென வென்றெறி முரசினன் விரும்பிச் சூட்டிய மன்றவந் தொடையலை மானத் தோன்றுமே. 44. வீங்கிய சாரலின் மீசைய வேங்கையின் ஓங்கிய பூஞ்சினை யுதிர்த்த வொண்மலர் பாங்குள துறுகலின் பாங்கர் ஆய்தர வேங்கையென் றிளம்பிடி வெருவி யோடுமே. 45. படக்கென யாக் கிளை யொடிக்கப் பாங்குறும் மடப்பிடி நடுக்குற மறித்து மற்றதன் இடத்துற வணைத்துகன் கினி துண் டின் புறக் க.-க்களி றாட்டி டுங் காட்சி காண்பரால். 46. பேரிளங் கன்றினைப் பிடியும் யானையும் நீரிடை நிறுத்தியே! நீண்ட கைகளால் சீரிய வுடம்பெலாந் தேய்த்துத் தேய்த்துமே பூரிநீ ராட்டிடும் புதுமை காண்பரால். 47. இன்பொடு கைமக வீரீ து தூங்கவே பின் பொடு முன் பொடு பிடியும் யானை யும் வன்பொடு கைகளால் வலியப் பற்றியே அன்பொடு பூசலாட் ட ர்தல் காண்பரால். 48, ஓங்கிய பாறையி னுயரத் தேறவே தேங்கிய பிடியினைத் திசைக்கை பற்றியே வாங்கவே தாயினீள் வாலைப் பற்றியே போங்குழக் கன் றதன் புதுமை காண்டரால். --- ... , . - 42. பொம்மல்-பொலிவு. பருத்தல். 43. துன் று அறை-நெருங்கிய பாறை. உற-மிக, 44, வீங்கிய - உயர்ந்தது. துறுகல் - உருண்டைக்கல். பிடி- பெண்யானை. மடம்-இளமை, கடம்-வெறி. 46, பூரி-மிக சி. 47, பின்பொடு முன் பொடு-பின் னும் முன்னும், 48. திசை-நீண்ட, குழக்கின் று-இளங்கின் று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/120&oldid=987633" இலிருந்து மீள்விக்கப்பட்டது