பக்கம்:இராவண காவியம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 இராவண காவியம் 6. எல்லை யற்றபல் வளமிகுந் தியல்திரா விடத்தில் அல்லே கண்டுயர் குமரியின் வடகிழக் கமைந்த முல்லை நாட்டினற் றலைநக ராகிய முகிறோய் எல்லி வெள்குறு மாடநீள் முதிரையி லிருந்தான். 7. பூத்த முல்லைநன் னாட்டினர்க் கொருதனிப் புகலாய் ஆத்தொ கைக்குமப் பொருட்குமோ ரழிவில்பே ரரணாய்க் காத்து வந்தமா யோனெனுங் கலைவலோன் றலைவி பூத்து வந்தவோர் நறுமணத் தமிழுயிர்ப் பொற்பூ. 8. அப்பொற் பூவினை யன்னை யுந் தந்தையு முலகில் ஒப்புக் கோர்பொரு ளின் றென வுயிரென வுயிரின் செப்புத் தானெனச் செப்பினைச் செய்பொரு ளென்ன மப்புத் தானறு மணியெனப் போற்றியே வளர்த்தார். 9. அகழெ ழுந்த செந் தாமரைப் பூவழ கழியத் திகழ வந்தவெண் மதியெனத் திகழ்தர வளர்ந்தாள் புகழி ராவணன் றேவியென் றுலகினர் போற்ற இகழி லாதொளி பரிள மதி திருவயிற் றிருந்தாள். வேறு 10. தண்டாமரை மலரோகினி தமிழோதமி முகமோ உண்டோர்மன முள்ளூற வெக்குந்தெளி தேனோ கண்டோகன யோவேறெது காணோமென வேதான் வண் டடார்குழல் என் றேபெயர் வைத்தார்மன மொத்தே. 11. தா ப .ா கிய தாழைச் சிறு வாயா கிய மழலைச் (சேயாகிய தா னுந்தகு தெளிவாகவே நாளும் வாயாகிய கை யாகியே மன மாகியே பூவுங் காயாகியே கனியா கிடக் கற்றேயறி வுற்றாள். 6. அல்- இருள. எல்லி-ஞாயிறு. 7. பூத்து உவந்தள. 8. செப்பு-சிமிழ. மப்பு--மாசு. 9. அகழி-குளம. இளமதி-மாயோன் மனே வி, 11. மழலை --குழந்தைச்சொல், வா ய் கை மனம் ஆதல்--படித்து எழுதி உணர்தல். பூ-கல்வி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/130&oldid=987623" இலிருந்து மீள்விக்கப்பட்டது