பக்கம்:இராவண காவியம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவில்லை யானால், இக்காவியமும் எழுந்திராது. ஒன்றின் விளைவு மற்றொன்று--விளைவு மட்டுமல்ல--ஒன்றுக்கு மற்றொன்று மறுப்பு!

இராமன், தெய்வ மாக்கப்பட்டான், இராமன் தெய்வமாகத் திகழ்வதற்காக, இராவணன் அரக்கனாக்கப் பட்டான், கோவிலுக்கு ஓர் உருத் தேவை என்பதற்காக, கொற்றவன் மகனாக மட்டுமே குறிக்கப்பட வேண்டிய இராமன் கையில், மகத்துவம் பொருந்திய கோதண்டத்தையும், இராம தூதனின் வாலுக்கு நினைத்த அளவில் நீண்டு வளரக்கூடிய மகிமையையும், கவி கற்பித்துக் கொண்டார். வாலும் வில்லும், வணக்கத்துக் குரிய பொருள்களாக்கப் படவே, தோள்வலியும் மனவலியும் படைத்த ஒரு மன்னன், மிலேச்சனாக்கப்பட்டான். இராமனுக்குச் செந்தாமரைக்கண் அமைத்தார் கவி; எனவே, இராவணன் கண்கள் செந்தழலை உமிழ்ந்தன என்று தீட்டலானார். அவருடைய நோக்கம், இராமனைத் தேவனாக்கவேண்டும் என்பது. அதற் கேற்றபடி கதை புனைந்தார்.

இராவணகாவியம், முன்னாள் கவி, தம் நோக்கத்துக்காக, இராவணன் மீது ஏற்றிய இழி குணங்களையும், கொடுஞ் செயல்களையும் களைந்தெறியவும், இராவணனுடைய தூய்மைக்கு ஆதாரமான பல புகலவும், அஃதே போல, இராமனுடைய குணம், செயல் ஆகியவற்றிலே காணக் கிடைக்கும் தவறுகளைத் தெளிவு படுத்தவும் தோன்றிய நூலாகும். இராமன் கோயில் எங்கும் காணப்படும் இக்காலத்திலே, இம்முயற்சியில் ஈடுபட "நெஞ்சழுத்தமும்" அதிகம் வேண்டுமல்லவா? அது ஆசிரியருக்கு அமைந்திருக்கிறது. எங்ஙனம் எனில், அவர் முன்னாள் கவிபோல ஆரியரின் போற்றுதல், அரசர்களின் மாலை மரியாதை ஆகிய வற்றினைப் பெறும் எண்ணம் கொள்ளாமல், மக்கள் மன்றத்திற்கு, மனதிற்பட்ட உண்மையை எடுத்துரைப்பதே தமிழன் மாண்பு என்ற கொள்கையினராகலாம், அவர் தன்மான இயக்கத்தவர். எனவே, தகுமா ? முறையா? ஏற்றதா? என்ற கேள்விகளை அல்ல, சொல்லித்தீர வேண்டும்--உண்மை வெல்லும்-இன்று அல்லது நாளை என்ற உறுதியைத் துணை கொண்டு இந்நூலைச் செய்துள்ளார்.

இராமனும் இராவணனும்--உண்மை உருவங்களா? வரலாற்றுக் காலத்தவரா? அல்ல கற்பனைகள், இதனைக் கூறத் தன்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/14&oldid=1536871" இலிருந்து மீள்விக்கப்பட்டது