பக்கம்:இராவண காவியம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. திருவிளக் கொடுபுகை சிதறும் பூக்களாற் கருமுகி லிடையிரு கதிரைச் சூழுமீன் பொரிசுட ரதுபடப் பொரிந்து வீழ்தல்போன்ம் பெருமகன் திருவொடு பெயருங் காட்சியே. 35. முத்தமிழ்ப் புலவரு முறையி னாக்கிய அத்தமிழ்க் கருவியோ டாடல் பாடலை இத்தனை காலமா வியையப் பெற்றிலா அத்தனை பயனுமின் றடையப் பெற்றரே. 36, கும்பலாய் வாழ்கெனக் கூடி வாழ்த்தவே கம்பனு மூரெலாம் நயந்து காணவே வம்பவிழ் தொடையொடு வயங்கித் தோன்றுபூங் கொம்பொடு குலமணிக் கோயில் 1 க்கனன். 7. மனையறப் படலம் 1. ஆந்தமிழ்க் காதல்) ரளித்த காட்சியை மாந்தியே களித்தவூர் மகிழ்ச்சி கூறினார்; சாந்தணி கோதையுந் தடக்கை வேல்'னும் சேர்ந்துசெய் மனையறச் சிறப்பைக் கூறுவாம். 2. கண்ணிய காட்சியாங் கள் வு வாழ்க்கையில் உண்ணிகழ்ந் தோங்கிய வொருமைக் காதலர் எண்ணிய படிநிறை வேறிற் றாமெனில் மண்ணிடை யிவர்க்கினி மதிப்பு வேண்டுமோ? 8. காதலை யொழுங்குறக் கற்ற காதலர் காதல ராயினார் கருத்து மொன்றினார் காதலின் கள வெனுங் கடலை நீந்தியக் காதலின் கற்பெனுங் கரையை மேயினர், 4. சீருற மணவினை செய்மெய்க் காதலர் ஒருட லோருயி ருள மு மொன் றிடப் பேரொடு பேருறப் பேரு மொன்றியே நீரொடு கலந்தநன் னீரைப் போன்றனர். 94. புகை-முகில். விளக்கு-விண்மீன். தூவுபூ-விழ்மீன். இறைவனும் இறைவியும் ஞாயிறு திங்கள. இருக திர்-ஞாயிறு 3. கற்பு-இல்லறம். 4. பேர் ஒன் றல்- 'காதலர்' எனல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/180&oldid=987693" இலிருந்து மீள்விக்கப்பட்டது