பக்கம்:இராவண காவியம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாகப் 3. தசரதப் படலம் வேறு 1. ஆமி தென் றறி யாவட வாரிய ரடைந்து காமு றுந்தமி ழகமதி லமைந்தமை கண்ட எம்; கோம் கன்பெரு கோசல நாடெனக் கொண்ட காமு கன்புதுத் தசரதன் இயல்பினைக் காண்பாம். 2. மரம் டர்ந்தமா விந்தமா மலையதன் வடக்கில் பரவி வாழ்ந்தனர் ஆரியர்; அவர்வளர் பதியில் சரயு வென்றிடும் பேரியாற் றங்கரை தன்னில் அரண மைந்ததொன் றாகுமா லயோத்திமா நகரம். அவ்வ யோத்தியில் குறுநில மன்னனா வமர்ந்தே எவ்வ மின் றியே யாண்டபேர்த் தசரத னென்பான் கொவ்வை வாய்மொழிக் கோசலை யெனுங்குறுங் கொடியைச் செவ்வி தாய்மணம் புரிந்துநன் மனையறஞ் செய்தான். 4. கன்னி கோசலை யோடவன் காதலிற் களித்துச் சொன்ன காம நால் முற்றுறு துறையெலாந் தோய்ந்தே அன்ன வாறுநாள் செல்லவே குறுநில மாளும் மன்னன் மாமகள் சுமத்திரை தன் னை யும் மணந்தான், இருவ ரோடமர்ந் தின்புற லோடமை கில்லான் பருவ மங்கையர் சிலரொடு மின்பினைப் பகிர்ந்தே மருவி வாழ்ந்தவன் வருகையில் தனதுதோள் வலியால் அருகி ருந்தால் நாட்டையும் வென்றுயர் வடைந்தான், 6. மறைவ லோர்மறை முறையென வகுத்தவவ் வழியே நிறைய வேள்விகள் செய்துமன் னார்குடி சிறையக் குறைவி லாப்பொருள் கொடுத்துமே குறுநில மன்னர் திறைகொ டுத்திறை யாக்குபே ரரசனாய்த் திகழ்ந்தான். 17. இன்ன வாறவன் பெரும்பொருட் கிறைவனா யெழிலார் துன்னி யின்னலச் சுவைதர வின்பினிற் றேய்ந் தும்; அன்ன மென்பணைக் கோசல நாட்டிறை யாயும் மன்னர் மன்னாய்த் தசரதப் பெயரோடு வாழ்ந்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/224&oldid=987739" இலிருந்து மீள்விக்கப்பட்டது