பக்கம்:இராவண காவியம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகப்ரெறு கடலில் 201 22. உறுதி கூறவே கேகயன் சரியென வொத்துப் பெறுதி யென் றனன்; தசரத னுளமகிழ் பெருகி அறுதி யாகவோர் நாட்குறித் தந்தநா ள தனை அறைதி யென்றன னின்றையே மணமுர சதனை.. 23. சோனை வார்குழல் துடியிடைப் பிடிகடைத் துவர் வாய்த் தேனை வார்தருங் கிளிமொழி பெருமணத் திருநாள் ஏனை நாளல் வீரிரு நாளை யே யென்று யானை மேலணி யாணைமா மணமுரசறைந்தான். 24. முரசறைந்த நன் னாள் வர முதுநக ருள்ளார் வரிசை யாகநன் னகரையொப் பனைசெய மணித்தார் அரச ரோடுற வேனரும் போந்திய லழகுப் பரிசி தேயென வந்தமர்ந் தார்மணப் பந்தர். 25. பல்லி யாங்கறங் கிடமறை யோர்மறை பாட வல்லி வைத்திரு மணமக ளாய்க் கொடு வந்தார்; மல்ல லந்தொடைத் தசரதன் புது மண மகனாய் நல்லி யன்றில கிடுமண வறையதை நண்ணி. 28. செந்த மற்கரி யாகவுன் றிருவனாள் பெற்ற மைந்த னுக்குரித் தாகெனக் கேகயன் மகட்குச் சொந்த நாட்டினைப் பரிசமாத் து, யநீர் வார்த்துத் தந்து நின்றிடக் கேகயன் தன் மகட் டந்தான். 27, பெரிய னான கே கயன்றரு வரிசையைப் பெற்றே அரிவை யோடவன் அயோத்திமா நகரினை யடைந்து மருவு மூவரோ டினும்பல மாதரை மருவி இருவி சும்பிடை மதியமீன் போற்பொலிந் திருந்தான், 4. மகப்பேறு படலம் வேறு 1. மாகயற் கண்ணி செல்வ மனைப்பெருங் கிழத்தி வாகைக் கேகயன் செல்வி யான கிளிமொழிப் பாவை யோடும், தோகைகோ சலையி னோடும், சுமத்திரை யொடுமற் றுள்ள பாகெனு மொழியா ரோடும் பயனுகர்ந் திருந்தான் மன்னன். 26, கரி-சான்று .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/227&oldid=987736" இலிருந்து மீள்விக்கப்பட்டது