பக்கம்:இராவண காவியம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

மூன்று வெட்டில் வெட்டி வீழ்த்தினார். கேசலை தன் கணவனைத் தழுவுவதுபோல் வெட்டுண்ட அவ்வாண் குதிரையைத் தழுவி அவ்விரவைக் கழித்தனள். சடங்குகள் முடிந்தபின் பலபகல் குதிரை, ஆடு, மாடு, ஆமை, பாம்பு, பறவை முதலிய பன்னூற்றுக் கணக்கான உயிர்களைக் கொன்று தின்று சோமக் கள்ளுண்டு இன்புற்றனர். தசரதன் கலைக்கோடர் முதலிய வேன்வியாசிரியர் மூவர்க்குக் கோசலை முதலிய மூன்றுமனைவிகளையும் காணிக்கையாகக் கொடுத்தான். அவர்கள் கனிமொழி பேசிக்கூடிக் கலந்தின்புற்று மூவரும் கருப்பமுறவே அவர்களுக்கீடான பொருள் பெற்றுக்கொண்டு தசரதனிடம் ஒப்பித்துச் சென்றனர். கருப்பமுதிர்ந்து கோசலை ராமனையும், கைகேசி பரதனையும், சுத்திமரை லக்குவ சத்துருக்கரையும் பெற்றனர், மக்கள் வளர்ந்து மணப்பருவ முற்றனர்

மனமுடைந்து சென்ற கோசிகன் அயோத்தியை யடைந்து வேள்வித்துணையாக ராமலக்குவரை அழைத்துக்கொண்டு இடைவளநாட்டை யடைந்து ஒரு சோலையில் தங்கினர். அங்கே தனித்து வந்த தாடகையை முனிவன் சொற்படி ராமலக்குவர் கொன்றனர். அங்கிருந்து சென்று தன் குடிலையடைந்து முனிவன் வேள்வி தொடங்கினன்

சுவாகு, இளவரசனான மாரீசனோடு சென்று வேள்வியைத் தடுத்தான், ராமன் சுவாகுவைக் கொன்றான். தன்னிலைமையுணர்ந்த மாரீசன் ஆங்கு நின்றும் மீண்டனன். மூவரும் வேள்வி முடித்துத் தமிழகத்தை நீக்கினர்

தூதரால் இதையறிந்த இராவணன், விந்த நாட்டை யாண்டு வந்த தனது தங்கை காமவல்லிக்குத் துணையாகப் பெரும்படையை அனுப்பினன். கரன் என்னும் படைத்தலைவன் அப்பெரும்படையை ஆங்காங்கு அமைத்துக் காத்து வந்தனன், காமவல்லியின் காப்பில் விந்தநங்சை புலைவேள்வியற்றுப் பொலிந்தனள்

வேள்வி முடித்துச்சென்ற மூவரும் மிதிலையை யடைந்து சனகன் விருந்தினராக இருந்தனர். சனகன் முனிவரிடம், தான் கண்டெடுத்து வளர்த்துவரும் சீதையை மணக்கப் பேராசர் எவரும் முன்வாராமையையும், அதனால் இவ்வில்லை வளைப்போர்க் குரியளென ஒரு வில்லை நாட்டியும் ஒருவரும் வாரா மையையும் கூறி வருந்தினான், முனிவர் கட்டளைப்படி ராமன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/23&oldid=1157728" இலிருந்து மீள்விக்கப்பட்டது