பக்கம்:இராவண காவியம்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாடகை கொலைப் படலம் 209 17. 18. திண்டிறலரண மேய திரைகட லிலங்கை வாழும் எண்டிசை புகாஷங் கொற்றத் திகலிரா வணனென் மைந்த! வண்டமிழ் மக்கள் தங்கள் மாபெரும் தலைவ னாகத் தண்டழி முகத்தை முற்றும் தனியர சோச்சு கின்றான். நம்மவர் வாழ்வு காண நைந்துளம் புழுங்கி நொந்து தம்மெனத் தருக்கி வாழும் தமிழகத் தலைவன் மைந்த! செம்மைய; மருளு மன் புஞ் செறிவொடு பொறையு நண்பும் இம்ரியு மில்லான் பொல்லான் இறைக்குணஞ் சிறிதும் புல்லான், 18. மைந்தகேன் நம்மோர் தங்கி வாழ்ந்திடும் வ ளமை மிக்க இந்தநல் விந்தச் சாரல் வேண்டுமென் றேபொய் யாகச் செந்தமி ழகத்தைச் சேர்ந்த தென்னவத் தென்னா டாள்வோன் வெந்திற லொருத்தி காப்பின் வீரரை யமர்த்தி யுள்ளான், 19, அன் னவன் சுகேது வென்னும் அருந்தமி ழரசன் செல்வி; மன்னரிய வுலகை நீத்த சுந்தனின் மனை யா ளாவாள்; இன்னெறி யில்லாள் பெற்ற மைந்தன் மா ரீச அ னென்பான் தன்னொடுஞ் சுவாகு வென் னும் தானையந் தலைவ னோடும். 20. இருவள் முடை1 விந்த இடைவள நாட்டை யாண்டு வருகிருள்; இரக்க மில்லாள், வலிமிக வுள்ளாள் பொல்லாள் கருவிலே பகையை நன்கு கற்றனள் போலும் மைந்தா! உருவிலே பெண்பா என் றி யுணர்விலே' யாண்பா லாவாள். 21. ஆடவ ரவாவத் தக்க ஆண்மையு மடடா! நம்மைச் சாடியே துரத்திப் போக்கும் சலமது முள்ளாள்; பொல்லாத் தாடகை என்னும் பேராள் தறுகணும் தளரா முன்பும் கூடியே யுள்ளாள் அன் னாள் கொடுமையை யென்னென் கோயான். 21. சலம்- தீராச்சினம், த றுகண்-அஞ்சாமை. முன் பு-வலி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/235&oldid=987728" இலிருந்து மீள்விக்கப்பட்டது