பக்கம்:இராவண காவியம்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வாய் தசரா தர்ச்சிப் படலம் 47. உள்ளத்தில் வெயர்வை சொட்ட ஒழிவிலாத் துயர மென்னும் வெள்ளத்தில் வீழ்ந்து மீண்டு மேலெழ முடியாள், வன்னத்தி லிருந்து துன்ப மொழிகளை வாரி வாரிப் பள்ளத்தில் பாயும் நீர் போல் பாவைசெஞ் செவியில் பெய்தாள். 48. வஞ்சி மிகவும் நல்லள்; மனத்திலும் வெள்ளைச் சோளம்! வஞ்சகன் உனது காதல் மன்னனுன் காலைக் கட்டிக் கெஞ்சுவன் ஆகு மட்டும் கெட்டவன் ஆன பின்னர் மிஞ்சின நீரைக் கூட வெறுநிலத் தூற்று வானே. 48. அரசியீ யவனை நம்பி அருந்துயர் படப்போ கின்றாய் கரிசன முடையா னுன் னைக் கலந்துசெய் தானோ இல்லை; அரசது பெறுவே னென்ன அன்னைக்குச் சென்று சொன்ன குரிசிலுன் னிடத்தில் வந்து கூறினா னில்லை கண்டாய், கொற்றவன் சூழ்ச்சி யாலக் கோசலை மகனிந் நாட்டைப் பெற்றபின் அவன் னோடு பேசவு மாட்டாள்; எந்தன் முற்றிழை நல்லாய்! செல்வ முழுதுமன் னவள்கைக் கொண்டு சுற்றமு முறவுங் கூடித் துய்க்கும்.போ தென்செய் வாய்நீ! 51, வாச லை நாடி வந்த வறியவர் தமக்கோர் கா சும் கோசலை யிடத்து வாங்கிக் கொடுத்திடப் போகின் ராயோ ? மாசிலா மணியே! தாங்கா மானத்தால் உடலி னுள்ளே ஊசலா டிடுமுன் தூ ய உயிர்விடப் போகின் றாயோ? 52. நல்ல'வுன் சுற்றம் வந்தால் கா ணியே மானம் விட்டுக் கொல்லெனச் சிரித்தேன் னென்னக் கோசலை மனையை நாடி முல்லைவெண் ணகையாய்! கையரில் முறத்தினை யெடுத்துக் கொண்டு செல்லவே போகின் றாயோ செத்து மடிகு வாயோ? இ-16 50,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/267&oldid=987786" இலிருந்து மீள்விக்கப்பட்டது