பக்கம்:இராவண காவியம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அது கேட்ட இலங்கை ஓவென்றலறியது. இராவணன் பலவாறு புலம்பிச் சீறியெழுந்து களஞ் சென்றான். இரவணனுக்கும் ராமனுக்கும் கடும் போர் நடந்தது. லக்குவன் முதலிய அனைவரும் சூழ்ந்து பொருந்தனர். ராமன் தேர்ப்பாகனைக் கொன்றான். பிடணன் குதிரைகளைக் கொன்றான், இராவணன் வெகுண்டு அப்பாவி மேல் எறிய வாளை ஓங்கினான். லக்குவன் குறுக்கே வந்து அம்பெய்யவே அவ்வாளை அவன் மேல் எறிந்தான், அப்போது, அதாவது-லக்குவன் பக்கம் வாளௌறியத் திரும்பும் போது, மாதலி என்பான் ஒரு கூரிய அம்பை ராமனிடம் கொடுத்து,வாள் எறிந்து திரும்பு முன் கொல்க எனவே, முறை கெட்ட ராமன் அவ்வாறே தமிழகம் புலம்பத் தலையறுத்து வீழ்த்தினான், தமிழர் மாபெரும் தலைவன் உடல் மண்ணில் புரண்டது. அடுகளம் அழகளமாய்து. வண்டார்குழலி உடனுயிர் விட்டனள். யாவரையும் அடக்கம் செய்து காடு வாழ்த்திச் சென்றனர் தமிழர். ராமன் மனைவியை யடைந்து பீடணனுடன் கோயில் புகுந்தான்.

ராமன் பீடணனோடு, தமிழகத்தில் தமிழரைப் போல எல்லா உரிமையும் எய்தி ஆரியா நிலையாய் இருந்து வாழ்வதற்கேற்ற ஒப்பந்தஞ் செய்து கொண்டு, பீடணனை இலங்கை யரசனாக்கிப் பெரும்படையைக் காப்பாக வைத்து விட்டு அயோத்தி சென்றனன். சுக்ரீவன் கிட்கிந்தை சென்றனன். பீடணன் ஆரிய அடிமையாய் அரசிருந்தனன்.

ராமன் அயோத்தி சென்று முடிபுனைந்து அரசனாகி வேத வேள்விகள் பல செய்து ஆரியரைப் போற்றி அரசு புரிந்து வருகையில், ஒரு ஆரியன் தனது மாண்ட பிள்ளையுடன அரண்மனையை யடைநது, உனது நாட்டில் ஒரு சூத்திரன்-தமிழன் தவஞ் செய்கிறான, -அதனால், எனது பிள்ளை இறந்தது எனக்கேட்ட ராமன ஆரியர் வழி காட்ட அங்குச்சென்று, பிடணனது ஆரிய அடிமையாட்சியை வெறுத்து வாள் வடக்கிருந்த --உயிர்விடற்கு உண்ணா நோன்பிருந்த சம்புகன் என்னும் தமிழ் மகனை வெட்டி வீழ்த்தி நகருற்றான். ஆரியர் செத்த பிள்ளை பிழைத்ததெனக் கூறிவிட்டனர்

ஒருநாள் ஒரு ஒற்றன் ராமனிடம் வந்து'அயலான் மனையில் பலமாதம் இருந்தவளை அழைத்து வந்து வைத்துக் கொண்டான் ' என ஊரார் பழிக்கின்றனர் எனக் கூறினான்.ராமன் அதைச் சீதையிடம் கூறி வருந்தினான். சீதை கணவனைத் தேற்றிச் சென்று ஒருவரு மறியாமல் சரயுவில் வீழ்ந் திறந்தனள். பிரிவாற்றாமல் ராமனும் அவ்வாற்றில் விழுந்திறந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/28&oldid=1157799" இலிருந்து மீள்விக்கப்பட்டது