பக்கம்:இராவண காவியம்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவண காவியம் 4. இலங்கை வாழு .பிராவணன் ஆணையிற் பொலங்க முற்கரன் என்னும் புலியனான் விலங்கு மாண்மைவேல் வீரர்கள் தம்மொடு வலங்கொள் விந்தகம் காத்து வருகிறான், 5. ஈங்கு நீங்கள் இருப்பதைக் கண்டவன் ஓங்கு வேள்வித் துணையுடை யோரென ஆங்கு நாங்கள் அடைய விடாதிகல் வாங்கு வீரரைக்' காவலாய் வைத்துளான், 6. இடிநி கர்த்தவர் இவ்வுல கத்தினை ஒருநொ டிக்கு ளொழித்துரு வங்கெடப் பொடி.ப டுத்தும் பொருவலி மிக்கவர்; கடுக டுத்திடிற் காற்றையு மெற்.றுவர். ஆத லாலிங் ககன்று தமிழகம் போது வீரெனிற் போதிய சூழ்ச்சியைப் பாது காத்தெமைப் பாதுகா வென்றுமே மாத வனன்கு வாயுற வாழ்த்தினன். 8. என்று கூறி யினத்துட னாயிடை நின்று சேர்வுற நீங்கியவ் வாரியர் சென்ற பின்னர்ச் செறிந்த வுயிர்களைக் கொன்று தின்றக் குறிய ரிருந்தனர். 9, ஓவ கூடத் துறைந் து பலபகல் பாவை யோடு பகலிரவின்றியே மேவி யின்ப நுகர்ந்து பின் வேறிடம் போவ தோல் மென் றவர் போயினார், 10, அங்க கன்றுபோய் அத்திரி தன்னிலை தங்க வன் மனை தையற் கணிகலன் அங்க லவைக ளே ஈடுபட் டாடையும் மங்கை கொள்கென வான் பரி சீந்தனள். 4, 6விலங்கு தல்-வெல்லுதல். த, இகல் வாங்கு-பகையை ஏற்றுக்கொள்கின்ற, 10. அம் கலவை.நல்ல கலவைசி சந்தனம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/298&oldid=987815" இலிருந்து மீள்விக்கப்பட்டது