பக்கம்:இராவண காவியம்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ் யாம் 889 34. தங்கையை யுருக்குலைத்த தகாச்செயல் தனக்காற் றாமல் எங்கையே யடியா ளென்னை எடுத்துவந் தாரே ப யன்றிச் செங்கைவே லண்ணல் என் மேல் செற்றம்வைத் துளரோ? இல்லை; மங்கை சிறிது நல்ல மனம்வைத்தால் வாழ்ந்தே " அ னேழை. 95. உய்குவேன் உன்னால் இன்றேல் ஒழிகுவன் எனவே பின்னும் கைகுவித் திறைஞ்சி வேண்டக் கைகளைப் பிடித்தே யுள்ளம் நைகுதல் விடுப்பாய்; இன்றே நங்கைநீ செலவேற் பாடு செய்குவன் தவறே னென்று திரிசடை கூறிப் போனாள். 9. பீடணப் படலம் 1. தாதவிழ் மலர்த்திரி சடையி னோடுதான் காதல னிடம்புகு கருத்தைக் கூறிய சீதையி னியல்பினைத் தெளியக் கண்டனம்; ஈதறி பீடணன் இயல்பு காணுவாம்... 2. மற்றவ ருரிமையை வலிந்து சூழ்ச்சியாய்ப் பெற்றிட நினைத்திடும் பேர வாவினான்; சற்றுநன் னெறிதவாத் தமிழர் வாழ்வுக்கோர் குற்றமாய்த் தோன்றிய குழவிக் கடனான் . 3. பண்டைய பெருமையைப் பகைவர்க் கீந்தனார் உண்டுமே தலைவரா யுயர்வு பெற்றிடத் தண்டமிழ் மக்களைத் தாழ்மை யாக்கிய உண்டவர்க் கிரண்டக முஞற்று பாவியே. செழுந்தமிழ் மக்களின் சிறப்பைப் போக்கியே முழுந்தரா மாரியர் முதன்மை பெற்றிட எழுந்ததன் முன் னனை யிகலைச் சேர்ந்துகொல் கொழுந்துவிட் டெ ரியுந்தீக் குச்சி போன்றவன். 4, முழுந்தர்-மூடர். இகல்-பகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/365&oldid=987869" இலிருந்து மீள்விக்கப்பட்டது