பக்கம்:இராவண காவியம்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக முன்னவனைக் கொல்வித்து முடிபுனைந்த கிட்கிந்தை மன்னவனைப் பார்த்தெனது மனை தேடித் தருகென்ன, அன்னவனு மனுமானை யருகழைத்து மதிவல்லோய்! தென்னிலங்கை யதுசென்று சீதையைக்கண் டீங்குறிவாய், 5. என வ னுமன் சரியென்ன, இழிகாமக் கொலைராமன் அனுமனை யன் பொடுதழுவி ஆழியதைக் கைகொடுத்தேன் மனைவியுனை யறியவீது வழிகாட்டும் எனப்பின்னும் என துநிலை சொலித்தேற்றி யினி திருக்கச் சொல்வாயே. 6. அங்கதனுங் கிட்கிந்தை மரகமெனக் குறவாகி இங்கிருக்கும் வகைக றி இன்னுமொரு சிலகாலால் உங்கள் நம் படையோடவ் வுயரிலங்கை வருதுமென மங்கையிடம் சொலியவளை மகிழ்ந்திருக்கச் சொல்வாயே, 7, என்றினைய பலசொல்லி என் வாழ்வுன் கையினிலே ஒன் றியுள திந்நன்றி யொருநா ளு மநக்கில்லேன்; வென்றியொடு தடையின்றி விரைவாகத் தென்னிலங்கை சென் றினிது மீள் கவெனச் சிக்: ராமன் விடை தந்தான். 8. பொன் றிடமுப் பெண் கொடுமை புரிந்த சிலை போனேவ என்றென்றும் தமிழர்குல மிழி நிலைமை தனையடைய ஒன் றியகோ டரிக்காம்பா யுற்றவிரண் டகவனுமன் தன் றமருக் கழிவுசெயத் தான் விடைகொண் டேநடந்தான், 9. ஒன் றியடால் விரண்டகரு முடன்றொடர் வழிக்கொண்டே குன்றுகளுங் கான்யாறுங் கு.றுவழியுங் கொடி முல்லை. மன்றலம்பூங் காடுகளும் மருதநில முங்கடந்தே சென்றடைந்தான் சிலபகலில் தெளிவில்லான் தென்னிலங்கை. 10, ஏடாணிக் கொடி நுடங்கு மெழில்மாட கூடமொடு பீடாரும் திருக்கோயில் பிறங்குமுயர் கொடுமுடியும் கூடாரை யுள்குவிக்குங் கோட்டையெனு மும்மதிலும் தேடாருந் தேடவமை தென்னிலங்கை யதுகண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/372&oldid=987892" இலிருந்து மீள்விக்கப்பட்டது