பக்கம்:இராவண காவியம்.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாத் படலம் 11. கண்ட.துமற் றவர்களையக் கானிருத்தித் தனித்துவழிக் கொண்டுசெல வழியிலிலைக் குடிலிடையோ ராரியனைக் கண்டுதொழ, அவன் வினவத் காரிகைச் தையைச்சிறைசெய் தண்டமிழோன் வரலாறுந் தன் வரவுங் கூறினனால். 12. அதுகேட்ட வாரியனும் அஞ்சாதே மதியனும்! மதிநுதலு மிலங்கையினில் மனமகிழ்வோ டிருக்கின்றாள் புதியதொரு செயலுங்கேள் புகழிலங்கைப் பேரரசை எதிர்நோக்கி இலங்கையர்கோன் இளையோனு முள்ளானாம். 13, அன்னவன் பேர் பீடணனென் றறைவார்கள்; அயோத்திநகர் மன்னவனாம் சிலைராமன் வரவையெதிர் பார்த்தபடி அன்னவனு முள்ளானாம்; அவனேவ லானொருவன் என்னிடஞ்சொன் னானீயும் இரவிடைச்சென் றவற்காண்பாய். 14. இப்பகலை யிவ்விடத்தி லேபோக்கி இரவினிலே நப்புலவர் மனம்போல நனவளத்த பதியுலகில் ஓப்டபரிய மதிலிலங்கை யுட் போவாய் என வனுமன் அப்பகலை யவ்விடத்தி லவன் கழித்து விடைகொண்டான். 15. விடைகொண்டு மகிழ்ச்சியினால் விம்முற்று நிறையவுளம் நடைகொண்டு தனியாக நஞ்சனேய வஞ்சகனும் மடைகொண்டு நீர்பாயும் வயல் மருத வள நாட்டைக் கடைகொண்டு புறமதிலைக் கடந்துவள . நகர்கொண்டான். 18. கண்டவனு மகநகரின் காட்சியினைக் கண்டுமகிழ் கொண்டவனும் பிறரையங் கொள்ளாமல் வழிநடந்து தண்டமிழி னிசைபாடுந் தடந்தெருவைக் கடந்துசென்றி ரண்டகனுந் தனையனவி ரண்டகன்வாழ் மனைகண்டான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/373&oldid=987891" இலிருந்து மீள்விக்கப்பட்டது