பக்கம்:இராவண காவியம்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராகனகாவியம் 17. கண்டவனுந் தலைவாயிற் காவலரால் வரவுணர்த்திக் கொண்டுமனை யுழிச்சென்று கொடும்பாவி குணமிலியைக் கண்டுதொழ விழிகுணனுங் கடைமகலு மெதிர்தொழுதி ரண்ட கனு மிரண்டகனு நடைப்பிணம்போ லெதிர்கொண்டார். 18. எதிர்கொண்ட பின் பவர்க ளிருக்கையினி வினிதமர்ந்து கதிர்கண்ட பகல்போலக் கலந்துள்ள முறவாடி அதர்கண்ட வகைவினவி அவன் சொல்ல மகிழ்கொண்டு பதர்கொண்ட மணிபோலப் பழிகண்ட. பீடணனும். அருகணை ய முடியாத அடல்வீர வாலிதனை ஒருகணை யா லுயிர்போக்கி யுடன் வருசுக் கிரீவனை நற் பெருகணையின் மீதிருத்திப் பேரரசு தந்துள்ளான் பொருகணைவிற் கையனெனப் புகல்கின்ற துண்மைகொலோ? 20. எனவனுமன் ஆம் உலகில் இணையில்லாச் சிலைவல்லான்; எனை யுலகு முழுதுறினும் இயம்பியசொல் லது பொய்யான்; அனையெனவக் தடைந்தவரை யழியினுங்கை . விடுதவிலான்; அனை யவன் மா மனைதேட அனுப்பினன் கா. பெணமதிறைவன். 21. நான் வந்த வழியிலொரு நற்றவனும் உயர்மிதிலை ஈன் வந்த சனகன் மகள் ஈங்கிருப்ப தாச்சொன்னான்; தேன் வந்த கருங்கூந்தல் சீதைநல மோவென்ன மான் வந்த போதைவீட வாழ்கின்றாள் மகிழ்வாக. என்னவிளை யோகலி இருந்த பெரும் பகைவர்களும் துன் னியரு கணைந்துபுகல் துணையருளு மெனவேண்டில் இன் னுயிரா யினுமீயும் இருந்தமிழர் இனம்புரக்கும் மன்னனுயர் பெருமையினை வழுத்தல்கொலோ! வெனவனுமன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/374&oldid=987890" இலிருந்து மீள்விக்கப்பட்டது