பக்கம்:இராவண காவியம்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமா ரத்தம் 10, மன்ன வாழி! மருவலர் போற்றிடும் தென்ன வாழி! செழுந்தமிழ் நாவலர் பொன் ன வாழி! எனவடி போற்றியே அன்ன வன் வர லாற்றை யறைந்தனர். 11. தலைகுனிந்துமுன் னிற்குத் தகவிலான் நிலையு ணர்ந்து நெடிதும் இரங்கியே கலையு ணர்ந்த புலவர் கருத்தெழும் அலைபொ ருந்து மகக்கட லண்ணலும். முருக்கு வெஞ்சின மோர்புற மூண் டெழ இரக்க மோர்புற மீர்த்தெழக் கொல்லெனச் சிரிக்கு மேறெனச் சீறுமிவ் வாறவன் சருக்கி வீழ்ந்த தகாநிலை யெண் ணியே. 13. உம்மி றைநல மோ? அவன் முன் னனைச் செம்மை யாயமர் செய்துவென் றனலோ? தம்மி னத்த தமிழருக் காகநீர் இம்மை செய்வ தெலாமுஞ்செய் தீரன்றோ? 14. அறமி குத்த வுனையமைச் சாயவன் பெறவி ழைத்தாற் பேறரும் பேறன்றோ? மறமி குத்த படைத்துணை வந்தெனை இறைவ னாக்க விருப்பது நன்றன்றோ? அடிமை வாழ்வை யகற்றித் தரிழரை முடிமை யாக்கநீர் முற்பட் டுளீரன் றே? கடமை நீங்கியோர் ஆரியர் காலினும் மிடிமை போல விழத்துணி யீரன் றோ? 16. குற்ற மற்ற குணத்தமி ழரினப் பற்றி லுங்களைப் போலவிப் பாரினில் உற்ற பேரி லொருவருண் டோவுமைப் பெற்ற தாயரும் பேறுபெற் றாரன்றோ? 15. முடி மை. தலைமை, மிடிமை-வறியர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/380&oldid=987884" இலிருந்து மீள்விக்கப்பட்டது