பக்கம்:இராவண காவியம்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி65 அழாப் படலம் 17. ஏனல் காத்துப் பிறரடி யேத்திவாய் தானங் காத்துத் திரியும் தமிழர்கள் மானங் காத்திட வந்து பிறந்ததும் கோனங் காத்த குணப்பெருங் குன் றன்றோ? 18. அயலைச் சார்ந்து பெருமை யடைதல்நற் செயல் தன் றெனும் செம்மை தனைப்பிறர் பயிலச் செய்து பழந்தமிழ்ப் பண்பினை இயலச் செய்ததும் போற்பெரி யாரெவர்? ஒன்றி ரண்டகஞ் செய்தின மோம்புதல் ஓன்றி ரண்டக முள்ளவர்க் கேதகும்; அன்றி ரண்டக மற்ற தமிழர்கள் அன்றி ரண்டக மாக்குதல் வல்லரோ? 20. ஆண்மை யற்ற வரசனைப் போக்கிவல் லாண்மை யுற்ற வரசனைக் கண் டி.னக் கேண்மை யற்ற கிளையாடக் கொண்டவிச் சூண்மை மற்றெவர் கண்டுளர் சொல்லுவாய்! 21. மறமி குத்தான் மன்ன னைக் கொன்றுகல் அறமி குத்த வரசனைக் கண்டதும் திறமி குத்த செயலினை யாரினிப் பெறமி குத்த வறிவைப் பெறவலார்? 22, இனத்துக் கூறுசெய் என் னை யொழித்திட. மனத்துக் கொண்ட மதிவலோய்! உங்கள்பு தினத்தி னோடு வராமல் எதற்கிங்கு தனித்து வந்தனை சாற்றுவாய்? என்னவே. 17. ஏனம்-பிச்சைப் பாத்திரம். வாய் தான் அக்கா த்து. அங்காத்தல். திறத்தல். கோன் அக்காத்த. அங்கரித்த-உயர்ந்த. 19, ஒன் று இரண்டகம்-பொருந்திய துரோகம், ஒன் று இரண்டு அகம்- இருமனம். அன் று- அல்லாமல், இரண்டு அகம். சூழ்ச்சி , தந்திரம், இர ண்டு அக 10 ஆக த தல் அவல் - ரோ அன் று . இரண்டு அகம்-ஈரிடம்-ஈரிடத்தன் பு. 90, கேண்மை -நட்பு. சூண்மை - தந்திரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/381&oldid=987883" இலிருந்து மீள்விக்கப்பட்டது