பக்கம்:இராவண காவியம்.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

857 அடிப் படலம் 31. செங்கை, வேலவா! சேவடி போற்றியான் இங்கு வந்த இழிசெயல் அன்னவன் மங்கை தன்னை அறிந்து வருகென எங்கள் மன்னவன் ஏவிட வந்தனன். 32. கண்டு மீள் கையில் காவலர் பற்றியே கொண்டு வந்து நிறுத்தினர் கொற்றவ! பெண்டு பிள்ளையோ டுண்டு பிழைக்குவேன் தொண்டனேனருள் கென்னத் தொழுதனன். 33. மன்ன னேவலில் வந்தனை யென் னினும் துன் னி நேரினில் என்னிடம் சொல்லுதல் நன் ன ரோடு நடைமுறை யன் றியும் அன்ன வன்மனை யானையான் காட்டனோ? 34. என்ன சொல்லினாள் சீதை? எனவவள் மன்ன னைத்தனி யாக வரும்படி சொன் ன தாயெனைச் சொல்லுக என்றனள் என்ன வாத இளையவன் அண்ணலே! 35, அயல வன் மனை யாளைச் சிறையினில் பயில் வைப்பதி லாகும் பயனுமென் மயிலை யிவ்வனு மானுடன் போக்கல்நற் செயல் தாகுமச் சீதை கண வனும். 36. செற்ற நீங்கி யகன்றுமே செல்குவன் மற்ற வன் கை வலியை மதிப்பிடில் பொற்றொ டிதனைப் போக்கலே) நன்மையாம்; குற்ற நீக்கிக் குணத்தினைக் கொள்கெனா. 37. ஏது சொல்லினாய் மான மிலாதுந் மாது டன்பிறந் தும்பிற வாதவா! யாது நற்குணம் ஆரியர் தம்மிடம்? போது வாயவன் கால்தொழப் புல்லியா! 38. உன் னு டன்பிறந் தாளை யுருக்குலைத் தின்னு யிர்கொல் இழிதகை யாளரை நன்னர்; வீல்வலி யாரெனு நாணிலீ! பின்னை வந்து பிறந்தனை கன்மனா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/383&oldid=987880" இலிருந்து மீள்விக்கப்பட்டது