பக்கம்:இராவண காவியம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகப் படலம்

11


23.மலைப்பிறந்து கற்றவழ்ந்து மலைச்சாரல் வழிநடந்தே

இலைப்பரந்த நறுமுல்லை எதிர்கானத் திடைவளர்ந்து

தலைப்பிறந்த வளமருதந் தனைமருவிப் பயனுதவி

அலைப்புகுந்து நலம்புரியு மாறென்ப ரவ்வாறே.


24.வடவரையு மிடைவரையும் வானளவுங் குடவரையும்

மிடைவரையா தெழுகோதா விரிகாரி பெண்பாலி

தடவரைகா விரிவானி தமிழ்வையை பொருனைமுதல்

நடைவரையா வாறுகளால் நல்வளத்த திருநாடு.


25.மலைவளமுங் கான்வளமும் மருதவயற் பெருவளமும்

அலைவளமுந் தலைமயங்கி யறாவளமா வமைந்ததொடு

நிலவளநீர் வளமெல்லாம் நிலைவளமா நிலவியதால்

இலகுதிரா விடமெனப்பே ரேற்றதுவா லிந்நாடே..


26.மஞ்சுதவழ் தருமேற்கு மலைத்தொடர்கீழ்ப் படமேற்கில்

விஞ்சுபுகழ்ப் பெருஞ்சேர வேந்தரிருந் தினிதாண்ட

வஞ்சியெனப் பெயர்பூண்ட மலிவளத்த திருநகரைக்

கொஞ்சுதலை ஈகராகக் கொண்டதுவா லிதன்கீழ்பால்.


கிழக்கு நாடு


27.சிங்களஞ்சா வகமுதலாந் தீவுகளும் திரையோவா

வங்கவிருங் கடற்பரப்பும் மரஞ்செறிகான் மலையருகச்

செங்கரும்புஞ் செந்நெல்லுஞ் செருக்கொடுவான் றொடவிகலும்

பொங்குவள வயல்மருதம் புனைநாடாப் பொலிந்ததுவே.


28.அம்மருத வளநாட்டி னணிநாகை யெனுநகரில்

மும்மதிலின் கோயிலிடை முறைதிறம்பா வகையிருந்து

செம்மையுடன் தமிழர்களைத் திசைமணக்குந் தமிழ்ச்சோழர்

தம்முயிரின் காப்பேபோற் றனிக்காத்து வந்தனரே.



34. மிடை தல்-நிறைதல். வரைதல்-நீக்கல். கீர்ரி--

கிருஷ்ணா, பெண்- பெண்ணையாறு. நீரைவரையா.

வற்றா. 25. திரு ஆ இடம்-செல்வம் பொருந்திய

இடம். திரு-செல்வம், ஆ-ஆகும், ஆதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/39&oldid=1203493" இலிருந்து மீள்விக்கப்பட்டது