பக்கம்:இராவண காவியம்.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 அவன் கான்பம் 21. பின்னரும் வாலி தன் னை (யுங் கொன்று பின்ன னைத் துணைவனாக் கொண்டாய் என் னினு முனது மனையவள் தனக்கோ ரின்னலுஞ் செய்திடா தன்னாள் முன் னரிலு மேலாய்த் தன்பிறப் பாக முறைமைகொண் டினிது வாழ்ந் திருத்தல் மின்னிலை வேலான் பெருங்குண மல்லால் வேறென வுரைப்புதற் குளதே? 22. அன்றியு மெங்கள் சொல்லினை மதியா தருந்தமிழ்ப் படைகளைக் கொண்டே இன்றெம தூரை முற்றவும் வந்தாய் என் னி னு மிறைவனுன் மனைவிக் கன்றுரைத் ததனைக் காக்கவே யுன்னை யழைத்துவா வென்றெனை விடுத்தான் உன்றனை க் கோற லவற்கொரு பொருட்டோ? உயிர்த்துணை உயர்குண மன்றோ? 23. அன் றையுன் மனைவி நொந்தழு திரங்க அஞ்சலென் றாறுதல் கூறி உன்றனை யழைத்து வந்தறி வுறுத்தி உடன்னுப் பு/வனென வுரைக்க மன்மலங் குழலும் மகிழ்ந்தனள்; அனுமன் வாய்மொழி கேட்டிலை யெனினும் இன்றுமு னுரைத்த மொழிபுரந் திடவே என்றனை யனுப்பினா னிறைவன். 24. ஆகையால் நீயு மெமதிறை யவனை யடைந்துநின் தவற்றினை யொத்து மாகலை வலனைப் பணிந்துமு னின்று மன்னிப்புக் கேட்டுமே யுன்றன் தோகையோ டெமது தாயகம் விட்டுக் தொன்னக ரடைந்துமே வாழ்வாய் வாகைவை வேலான் சொற்படி யுரைத்தேன் மறுக்கில் நீ பொரத்தயா ராவாய். 25. என்றுமே தூத ன் னண முரைப்ப எரிசினங் கனன்றுமே பிறரை என்றுமே பணியேன்; நாளையே போந்தும் இலங்கையோ டுங்களை யழித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/396&oldid=987898" இலிருந்து மீள்விக்கப்பட்டது