பக்கம்:இராவண காவியம்.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. கன்றித்தடை செய்யிய காவலரைக் கொன்றக்கரை சென்றவர் கூடும்வரை நின் றக்கரை நேர்மையி லாக்கடையோன் பொன் றத்தமர் காவல் புரிந்தனனே. 11. வில்லாளிக ளாகிய மேவலராம் பொல்லா வட வாரியர் போதாவே நில்லாவுயிர் நீடிய நீலன் முதல் எல்லாரு மெடுத்தன ரக்கறையே. 12. படையக்கரை சென்று பசும்பழனக் கொடைமிக்குயர் கூல மிகுந்து புனல் நடை மிக்கவர் நாடு கடந்துநடந் தடையக்கொடி யாடு மிலங்கையினை, 18. சேனைத்திர ளோடவர் சென்று நறுந் தேனைப்புரை செந்தமிழ் தந்துவளர் கோனைப்புரை கூட முயர்ந்த புயல் வானைப்புரை மாநகர் கண்டனரே. 14. ஏடாணியி னேன்ற தமிழ்க்கொடியொண் கோடாருயர் மாட கொடுமுடிமேல் கூடார்வரு கின்றனர் கொல்லுமென் நாடாவியல் நங்கையர் போலியலும். 15. ஒப்பேது மிலாத வுயர்மதில்போல் இப்பாரினி லெங்கு மிலாததினால் எப்போது மறிந்தில தின்றறிய அப்பாவிக ளாயின ராரியரே. 10, கன றி-சினந்து, கடையோன்-பீடணன், 14, நீடிய - நீடியதெனக் கொண்ட. அக்கறை • பெரு முயற்சி. 19. உலம- தீவசமும், ஆடுமாடுகளும், மடை-ஒழுக்கம். கீர்நிறைந்திருத்தல். அவிர்தல் விளங்குதல், 14 கோடு ஆர்-பக்கம் பொருந்திய. கொடிமுடி-கேரபு ரம். காடா - நாடும.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/432&oldid=987952" இலிருந்து மீள்விக்கப்பட்டது