பக்கம்:இராவண காவியம்.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. என்றங்கவ ரின்னன வெண்ணினராகச் சென் றங்கு திறந்த வெளிப்புறமோர் குன் றந்தனி லேநிலை கோலியபின் ஒன்றங்கென வொற்றரை விட்டனரே. 22. அன்னார்விரை வாகவே சென்றெமதி மன்னாபடை வந்த தெனத்தொழுது சொன்னாரவர் தொல்லை கொடுத்ததையும் தென்னாரிறை சீறி யெழுந்தனனே. 28. சொல்லாண்மை பழுத்துயர் தூயவரைப் பொல்லாவட வாரியர் போர்நிலையை வல்லேயறிந் தோடி வரவிரைவாய்ச் செல்லீரென வேயவர் சென்றனரே. 24. அவர்சென் றபீ னாரிய னண்ணன்முடி கவர்கென்றிரு காலில் விழுந்தவனைச் சுவரொன்றுயர் தொன்மதில் முற்றுமியல் உவரம்பட வோதென வோ தினனே. 25. தன்னோரடி யோடு தரைப்படவே இன்னானுள வோதி யிருக்கையிலே பின்னேகிய ராகிய பேரியலார் அன்னான்விழி தன்னை யடைந்தனரே. உற்றாருயி ருண்ணிய வெண்ணியனும் ஒற்றாடிட வுற்றவ வொற்றர்களைப் பெற்றோர்பெறு பிள்ளையை வெல்லவருஞ் செற்றோரிடை சேர்ப்பன செய்தனனே. 27. நடைமேவிய நற்றமி தொற்றர்களை வடவாரிய மள்ளரி ராமனிடம் விடவேயவன் வேவு பெறாதகலக் கடவீரென வீடு கடத்தினனே. 24. உவரம்-இனிமை, நன்கு. 37, வேவு உணவு, வீடுகடத்தினன் - விட்டான், விடு பாடிவிடுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/434&oldid=987950" இலிருந்து மீள்விக்கப்பட்டது