பக்கம்:இராவண காவியம்.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. இன்ன 'காலை யிலக்குவ னேமுதல் அன்னர் யாரு மருந்தமிழ் மன்னனைத் துன்னி வெஞ்சுடர் குழ்பரி வேடமே என்ன வெங்கணை யேவினர் பாவிகள், துன்றி யேவுஞ் சுடுகணை மாரியைப் பொன்ற வீழ்த்திப் பொரவொரு தேரினில் சென்று ராமனுஞ் செய்ய தேர்ப் பாகனைக் கொன்று வீழ்த்தினன்; கோமன் தம்பியும். 20. படுஞ்சி னத்த பரிகளைக் கொல்லவே கடுஞ்சி னத்தொடு கன் றரி யேறுபோல் கொடிஞ்சி நின்று குதித்துக் கொடியன்மேல் நெடுங்கை வாளை நிறம்பட வோங்கினான். 21. கொடிய பாவியைக் கொன்மென அந்தவாள் வடவ னெம்பியும் வந்தவன் முன்னுறக் கடிதி னேவிடக் கண்டவி ராவணன் படிறற் காத்தவப் பாவிமே லேவினான். 22. நிறம்பி வந்து நிலத்தில் விழுந்தான்; புறம்பு நின்ற புலைமகன் மாதலி அறம்பி றழ்ந்தவில்லாளியை யண்மியே குறும்ப ரம்பனோர் கூர்ங்கணை தந்துமே. 23. நம்பி கேட்டருள் நல்லதிவ் வேளையே எம்பி மீதுவா ளேவிடு முன்னரே தும்பி யந்தொடைத் தூமணி மாமுடி. வெம்பி யேநிலம் வீழ்ந்திடச் செய்கென. 18. பரிவேடம். சூரியனைச் சூழும் வட்டம். 19. தம்பி-பீடணன். 20. கொடிஞ்சி- ேதர்த்தட்டு, நிறம்-மார்பு. 24, எவிட்ட.அம்பெய்ய. படிறன் -பீடணன். 38. குறும்பர் அம்பன் - குறும்பர் லக்பட்ட அம்பு போன்றவன். குறும்பன்- கெட்டவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/485&oldid=987992" இலிருந்து மீள்விக்கப்பட்டது