பக்கம்:இராவண காவியம்.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஆய காலைவண் டார்குழல் கைதலை தோய வேற்கண் டொடுமணற் கேணியிற் பாய் வோவெனப் பாடிப் புலம்பியே போயொ ருங்கிறை வீழ்களம் புக்கனள். 39. புக்க துந்தமிழ்ப் பூத்தபூங் கொம்பினைத் தொக்கு மேதமிழ்த் தோகை மயிவினம் செக்க மேனி சிவக்கச் சிவக்கறைந் தொக்க வோவென வோங்கி யழுதனர். 40. புலம்பி னோடு புகுந்திறை மீதவள் அலம்பு வேடன தம்புற வேமயிற் குலம் புலம்பிடக் குன்றினிற் றேயயற் சிலம்பு வீழ்மயில் செத்து விழுந்தனள். 41. புல்லி யேயுடல் போர்த்தொரு மைப்படக் கொல்ல ஏதுங் குருகிற் பொருமியே வல்லு யிர்த்திதோ வந்தன னென் றுளே சொல்லி யேமுகந் தொட்டுயிர் விட்டனள். 42. தன்னைத் தாங்கும் தமிழர் தலைமகன் தென்னர்க் காவன செய்து திருவொடு நன்னர்த் தாய நலமிவை கொல்லெனப் பன்னிப் பன் னிப் பரிந்து புலம்பினர், 43.. தையு றுந்தமிழ்த் தாயின் றலைமகள் மையு றும்பொழில் மாலையும் பல்வகைப் பையு றுந்தமிழ்ப் பண்ணையு மெண்ணியே கைய றுநிலை யுற்றுக் கதறினர். 40, அலம்பு-வ றிய, புலம்பிட்-தனித் திட, சிலம்பு-பக்: மலை. செத்து போல. 41. குருகு-துருத்தி, பொருமி-பெருத்து. வல்உயிர்த்து- பெருமூச்சுவிட்டு, 43. தன்னைத் தாங்குதல் - தனக்குத் தானே ஒப்பாதல், நன் னர் நன்மை . 43. தை, பை-அழகு. மாலை-மாலைக்காலம், பண்ணை , விளையாட்டு. கையறு நிலை-அயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/488&oldid=987989" இலிருந்து மீள்விக்கப்பட்டது