பக்கம்:இராவண காவியம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. இன்னணம் வேண்டுஞ் சிறப்பெலாம் பொருந்தி யிருந்தமி ழகத்திடை யொளிரும் பொன்னெனப் பொலிந்து பூவென மலர்ந்து 1/லவர்செந் நாவிடை வளர்ந்த தன்னிக ரில்லாத் தனித்தமிழ் மொழியைத் தாய்மொழி யாகவே யுடைய மன்னிய பெரும்பேர் மருவிய தமிழ் மக்களே மக்களுள் மக்கள். வேறு 17, வில்லே ருமும்போர் வீரர்களும் வெவ்வே றான வினைவலரும் நெல்லே நழும்வே ளாளர்களும் நிலங்காப் புடைய மன்னர்களும் மல்லே நழும்பொன் வாணிகரும் மனை யே நழுமா தருமவரிற் கல்லா தவரே யில்லா ராய்க் கற் றே யறிவைப் பெற்றாரே. வேறு 18. ஓடுகை யில்லா ரில்லை யியலிசை கல்லா எல்லைப் பாடுகை யில்லா ரில்லைப் பள்ளியோ செல்லா ரில்லை ஆடுகை யில்லா ரில்லை யதன் பயன் கொள்ளா ரில்லை நாடு கை யில்லா ரில்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா. தமிழென திருகட் பார்வை தமிழென துருவப் போர்வை தமிழென துயிரின் காப்புத் தமிழென துளவே மாப்புத் தமிழென துடைமைப் பெட்டி தமிழென துயர்வுப் பட்டி தமிழென துரிமை யென் னத் தனித்தனி வளர்ப்பர் மாதோ, 20. நாடெலாம் புலவர் கூட்டம் 15கரெலாம் பள்ளி யீட்டம் வீடெலாத் தமிழ்த்தாய் கோட்டம் விழவெலாம் தமிழ்க்கொண் டாட்டம் டபாடெலாந் தமிழின் றேட்டம் பணையெலாந் தமிழ்க்கூத் தாட்டம் மாடெலாந் தமிழ்ச்சொல் லாட்டம் வண்ட மி ழகத்து | மாதோ. 17, மல்-வளம், வருவாய். 19. ஏமாப்பு கருத்து. பட்டி-உறைவிடம். 20. பாடு-வேலை, தேட்டம்- செல்வம், பணே ---வயல், மாடு-பக்கம், சொல்லாடல்-சிம்பாஷணை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/66&oldid=987566" இலிருந்து மீள்விக்கப்பட்டது