பக்கம்:இராவண காவியம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலங்கைப் படலம் 9. சங்கினம் யந்த முத்துந் தாமரை தந்த முத்தும் வெங்களி முகுத்த முத்தும் வேய்கழை யுதிர்த்த முத்தும் எங்குமே முத்தந் தத்தி யிலகுத லிலங்கை யென்னும் நங்கைமற் றவற்றை யெள்ளி நகைத்தல்போற் றோன்று மாதோ. 10. பொன் னே யுந் திகழு மொன்பான் மணியையும் பொருந்திச் செந்நெல் கன்னலுங் கனியுங் காயுங் கடிமலர் கிழங்குந் தேனும் புன் னை யுங் கமுகு மேனைப் பொழிலொடு வாழை தாழை தென் னையும் பனையு மோங்கித் திகழ்ந்ததவ் விலங்கை நாடே. 11. நால்வகைத் திணையுந் தாய்போல் நல்குபல் க லத் தோடு பால்வகைக் ல லந் தாங்கிப் பல்வகை வளமும் தேங்கி நூல்வதைத் தமிழின் காட்சி நுணங்கிய பெரியா ரோடு மேல்வகைக் குடிகள் வாய்ந்து மிளிர்ந்ததவ் விலங்கை நாடே. 12, ஒலிபுனல் நடுவ தாலு முயரிய மலைக ளாலும் நிலவுமிழ் முடிகளாலும் நெடுந்தமிழ்க் கொடிக ளாலும் அலகில்பொன் மணிக ளாலு மமைந்தபல் வளங்க ளாலும் இலகுதல் நோக்கி மேலோர் இலங்கையென் றிசைத்தா ரம்மா . 13. முகர்பொரு ளொன்றோ குன்றா மூவின மொடுநன் மக்கள் நகர்பொரு ளெல்லா மான்ம நூ! • வரியற்றிக் கொண்டு பகர்பொரு ளிவையா மென் னப் பயன் படப் பொலிந்தெந் நாளும் நிகர்பொரு ளினவா யெங்கும் நிறைந்ததவ் வீலங்கை நாடே. 9, வேய் - மூங்கில். கழை - கரும்பு. மற்றவை - மற்ற நாடுகள், 10. கன்னல்-திரும்பு, 11. கூலம். தவசம், பயி று. கூலம்-மாடு, நுணங்கிய காட்சி- கூரிய அறிவு. 12. முடி - மாடத் தின் உச்சி. இலங்கை -தீவு, 13, மூவின ம- ஆடு மாடு எருமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/79&oldid=987583" இலிருந்து மீள்விக்கப்பட்டது