பக்கம்:இருட்டு ராஜா.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118இருட்டு ராஜா

 கிட்டு இருந்தா.நான் வழக்கம் போலே படுத்துத் துங்கிட்டேன். தினசரி அவ வேலைகளை எல்லாம் முடிச்சிட்டுப் படுக்கிறதுக்கு பத்து,பத்தரை ஆயிரும். அம்மா கூடத்தான் படுத்து உறங்குவா. ஒண்ணரை ரெண்டுமணி இருக்கும். அம்மாதான் என்னை எழுப்பினா, நீலாவை காணோம்னு சொல்லி கண்ணீர் வடிச்சா. புறவாசல் கதவு சும்மா சாத்தியிருந்தது. உள் தாப்பா போட்டிருக்கலே. விளக்கை ஏத்திக்கிட்டு அம்மாவும் தானும் பின் பக்கம் போய்ப் பார்த்தோம். வீட்டைச் சுத்தி வந்து பார்த்தோம். ஆளே இல்லை. அப்புறம் தூக்கம் ஏது? விளக்கை வச்சுகிட்டு, குறுகுதுன்னு உட்கார்ந்திருந்தோம். அம்மா அழுது கிட்டேயிருக்கா. வாய்விட்டு ஒப்பாரி வைக்கக் கூடிய விஷயமா இது? மவுனமா கண்ணீர் வடிச்சபடி முடங்கிக் கிடக்கா. இப்படி பண்ணிப்போட்டுதே சின்னச்சவம்! “படக்குன்னு பாடையிலே போயிருந்தாலும் நிம்மதியா யிருக்குமே! இப்போ தன் பேரு, குடும்பப் பேரு, எல்லாரு பேரையும் சந்தி சிரிக்கும்படி செய்திட்டாளே என்று முணுமுணுத்தபடி கிடக்கா...”

முத்துமாலை நன்கு விழிப்புற்றவனாய் நிமிர்ந்து உட்கார்ந்து, அவன் சொல்வதைக் கேட்டான். பிறகு விசாரித்தான்.

“நீ என்ன நினைக்கிறே? வீட்டுப் பக்கத்திலே எவனாவது அடிக்கடி வாடை புடிச்சுக்கிட்டுத் திரிஞ்சானா? நீலா கண்ணு எவனையாவது சுத்தி அலைஞ்சு கிட்டிருந்துதா? உனக்கு யார் பேரிலாவது சந்தேகம் இருக்குதா?”

ராமதுரை பெருமூச்சு விட்டான். சிறிது நேரம் மவுனமாக இருந்தான். “மூக்கன் பயல் அலைஞ்ச அலைச்சல் சரியில்லே. சில நாளாகவே எனக்கு டவுட்டு இருந்தது. நீலாவும் அவனைப் பார்க்கிறப்ப எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/120&oldid=1140040" இலிருந்து மீள்விக்கப்பட்டது