பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இரத்தம் பொங்கிய மிக்கோன் நெப்போலியன் கூறினான். இருபது ஆண்டுகள் இரத்தம் கொட்டப்பட்டதற்காகத் தன்னை மன்னிக்கும் படி கேட்டானில்லை. என் நோக்கம் நல்லது; கணக்குப் பொய்த்துப்போய்விட்டது; அவ்வளவுதான்!-என்று மட்டுமே கருத்தறிவித்தான். "இருபதாண்டுகள் இரத்தம் பொங்கச் செய்தவனா? ஐயோ! அத்துணைகொடியவனா! மனிதகுலத்தைக்கருவறுக்க வந்த மாபாவியா! என்று சண்டித்து, அவன் கல்லறைமீது காரித்துப்புகின்றனரோ, இன்று? இல்லை! கல்லறையைக் காணும்போது, கண்களில் நீர் துளிர்க்கிறது. அவன் நடாத் திய போரிலே கொட்டப்பட்ட இரத்தம் பற்றி அல்ல, அவன் காட்டிய வீரம்பற்றி, போர் முறைகளை வகுத்த நேர்த்தி பற்றி, பெற்ற வெற்றிகளைப் பற்றி, அவனைச் சுற்றி அமைத்திருந்த புகழொளி பற்றி எண்ணுகின்றனர்- எண்ணி யதும், நீர் துளிர்க்கிறது. கண்களில்! நானிலத்தை நடுங்க வைத்த ஓர் மாவீரன் கல்லறைமுன் நிற்கிறோம் என்ற உணர்வு: வலிவு பெறுகிறது; வாழ்த்தத் தோன்றாவிட்டா லும், வசைபாட முடியவில்லை, வணக்கம் கூற முனைகி றோம். இந்தக் கல்லறையிலா உள்ளான், கடும்போர் பல புரிந்த நெப்போலியன்-- காவலர் பலரைக் கவிழ்த்தவன்-- புதிய காவலர்களை நொடிப்போதிலே உண்டாக்கிக் காட்டிய இந்தக் கல்லறைக்குள்ளா அடைபட்டுக்கிடக்கிறது, பல நூற்றாண்டுகளாக எங்கும் எவரும் கண்டறியாத வீர உணர்ச்சி- போர்த்திறன்!! என்று வியப்படைகின்றனர். வன். கல்லறை காட்சிப் பொருளாகிவிட்டது. கல்லறையைக் கவனிக்கத் தொடங்கி விட்டோம்- கடைசியாகக் காணவேண்டிய கல்லறையை; முதலிலேயே!! உலகினரில், அரசு நடாத்துவோர் ஆற்றல் அறிவோர், படை நடாத்துவோர், போர்முறை வகுப்போர் என்பவர் பலரும், சுட்டிக் காட்டிக் கல்லறை காண்மின்! கல்லூரி கள் பலவும் கற்பிக்க இயலாத கருத்துக்களைப் பெற்றிடலாம் --அத்தகைய கல்லறை இது, என்று சுட்டிக்காட்டிடத்