பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105. இருபது ஆண்டுகள் தீவிலே பிறந்தான்--தீவிலே இறந்தான்! ஆனால் புதைகுழியினின்றும் உடலை எடுத்துச் சென்று, பாரிஸ் பட்டணத்திலே, அரச விருதுகளுடன், மற்றோர் கல்லறையில் அடக்கம் செய்தனர், பிரான்சு நாட்டு ஆளவந்தார்கள்-சில ஆண்டுகளுக்குப் பிறகு, தீவிலேயே உடலம் இருந்துவிட வில்லை — புகழொளி மிகுந்த பாரிஸ் பட்டினம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் தீவிலே பிறந்தான்—தீவிலே இறந்தான்! கார்சிகா தீவு போதுமானதாக இருக்க இயலுமா, அள வற்ற ஆற்றல் கொண்டோனுக்கு! பிரான்சு சென்றான்! ஐரோப்பா அழைத்தது! எகிப்து அழைத்தது! வீரக் கோட் டங்களில் உலவினான்! தீவிலே இறந்தான்—எலினா தீவில்! ஆனால், அவனி போர் கண்டு அதிசயிக்கத்தக்க ஆற்றலரசனுக்குப் போது மான இடமா, எலினா தீவு!எப்படிப்பட்ட கல்லறை!அதற்கு கொண்டு ஏற்ற இடம், பாரீஸ் அல்லவா? அங்குதான் போகப் பட்டது, நெப்போலியனின் உடல். கார்சிகாவிலிருந்து பாரிஸ்; பாரிசிலிருந்து எலினா தீவு; எலினா தீவிலிருந்து பாரிஸ்! இந்தப் பயணம், கேட்போர் காப்பியமாகி வியப்படையத்தக்க நிகழ்ச்சிகள் கொண்ட விட்டிருக்கிறது. நெடுந்தொலைவு "புறப்பட்டு வருகிறேன் மகனே! என்கிறார்கள். வழியிலே இறந்துவிடுவேன் என்று சொல்கி றார்கள். இறந்தாலும் பரவாயில்லை; பயணத்திலே இறந் தால், இப்போது இருப்பதைவிட உனக்கு அருகாமையில் இருப்பேனல்லவா! அதுபோதும் மகனே! புறப்படுகிறேன்" -- என்று, நெப்போலியனுடைய தாயார் லெடிசா அம்மை யார் கடிதம் அனுப்பினார்கள்—எலினா தீவுக்கு. கடிதம், எழுதப்பட்ட ஓராண்டுக்குப் பிறகு நெப்போலி யனுக்குக் கிடைத்தது. படித்துப் படித்துப் பாகாய் உருகி னான். அன்னையோ, நெடுந்தொலைவில், ரோம் நகரில்! எலினா தீவு சென்று மகனுடன் தங்கி இருக்க அனுமதி கிடைக்கவில்லை. மகனைப் பிரிந்து மனமுடைந்த நிலையில் லெடிசா, இருந்துவர நேரிட்டது.