பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய குடும்ப பாசம் மிகுதியும்' கொண்டவர்கள், கார்சிகா தீவு வாழ் மக்கள். கார்சிகா தீவு, பிரான்சு நாட்டு ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது--ஆனால், அது தனியாக தீவு! அந்தத் தீவு, அரசுரிமை பெறவேண்டும் என்ற விடுதலைக் கிளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நாட்களில்தான், நெப்போலியன் பிறந்தான். அவனுடைய தந்தை, விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தவர். அந்தக் கிளர்ச் சியை நடாத்திவந்த பாயொலி எனும் தலைவனுக்குத் துணை நின்று போரிட்டவன். 106 தொட்டிலிலே நெப்போலியன் கிடந்தபோதே, போர்ச் சூழ்நிலை, அந்தத் தீவிலே. தாலாட்டாக அமைந்த பாட்டே, விடுதலைப் போர் குறித்ததாக இருந்தது என்று கூறலாம். தொட்டிலிலே படுத்திருக்கும் குழந்தை, கால்களால் உதைக்கிறது! எதை? வெறும் காற்றுத்தானே தட்டுப்படு கிறது. ஆனால் எதிர்காலத்திலே, மணிமுடிகளைப் பந் தாடப் பழகிக் கொள்கின்றன போலும், அந்தக் கால்கள்! கைகளை ஆட்டுகிறது, எதனையோ, பிடித்துக் கொள்ள முனைவதுபோல! என்ன வேண்டும் இந்தக் குழந்தைக்கு? விளையாட்டுக்கான பொம்மைகளா! தின்னப் பழமா!- இப்போது அவை போதும். ஆனால், அந்தக் கரங்கள், போரிடப் போகின்றன பல அரசர்களுடன்— வலிவு பெற்ற தும் - அதற்கு இது ஒத்திகை போலும். லெடிசா, குழந்தையிடம் கொஞ்சிக் குலவாமலிருந் திருக்க முடியாது-ஆனால், அதற்கு அதிக நேரம், ஓய்வு கிடைத்திருக்க முடியுமா என்பது சந்தேகந்தான், விடுதலைக் கிளர்ச்சியிலே ஈடுபட்டிருந்த கணவன்; குடும்பம் நடந்திட வழி தேடும் பொறுப்பினை ஏற்றுத் தீரவேண்டிய நிலையிலே லெடிசா. மிகச் சிக்கனமாகக் குடும்பத்தை நடத்தி இருக்க வேண்டும்-- நெப்போலியனுடன் சேர்ந்து எட்டு குழந்தைகள் லெடிசாவுக்கு.