பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் குடும்பத்துக்குச் சிறப்புப் பெயராக, போன பார்ட்டி என்பது அமைந்திருந்தது. அந்தப் பெயரின்படி பார்த்தால். இத்தாலிய மேட்டுக் குடியினர் இக் குடும்பத்தினர் என்று தெரிகிறது. 107 . நெப்போலியனுக்கு, வெற்றிமேல் வெற்றி கிட்டிய நாட்களில், இந்த உணர்ச்சி மேலோங்கியும் காணப்பட்டது. 'பிரபு வம்சம்' என்று கூறிக் கொள்வதிலே ஒரு சுவை இருக் கத்தான் செய்தது. ஆனால் புகழ்பாடி மயக்க விரும்பிய சிலர், குடும்பத்தின் பூர்வீக பெருமைகள் பற்றி அதிகம் கதைத்த. போது, நெப்போலியன், விரும்பவில்லை. பொய்யுரை கேட்டு ஏமாறுபவன் அல்ல என்பதால் மட்டுமல்ல, இந்தக் குடும்பத் துக்கு, வேறு எந்தக் குடும்பத்துக்கும் ஏற்பட இயலாத பெரும் புகழ் ஈட்டியிருக்கும்போது, பழைய நாட்களிலே என்னென்ன பெருமைகள் இருந்தன என்று கண்டறிந்து கூறத்தான் வேண்டுமா? வைரம் ஒளிவிட்டு, அதன் மதிப் பைத் தானே எடுத்துக் காட்டும்போது, அது எத்தகைய ஆழமான சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதைக் கூறியா, புதிய மதிப்புத் தேடவேண்டும்! நெப்போலியன் இவ்விதம் எண்ணாமலிருந்திருக்க முடியாது. . கார்சிகா தீவில்,அஜாசியோ எனும் சிற்றூரில், 1769ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள் 15-ம் நாள், நெப்போலியன் பிறந்தான். அஜாசியோ எனும் ஊர்,கார்சிகா தீவுக்குத் தலை நகரம்கூட அல்ல. கார்ட்டி எனும் இடமே தலைநகரமாக இருந்தது. . - நெப்போலியன், புகழேணியின் உச்சியில் இருந்தபோது குடும்பத்தினர், உற்றார் உறவினர் அனைவருக்கும், புதிய புதிய பதவிகள் வழங்கினான் - நிலைகளை உயர்த்தினான். தாய், லெடிசாவை அன்பாகக் கேட்டான்; விரும்பி இருந் தால் ஏதாவதொரு நாட்டுக்கு அரசியாக்கிவிட்டிருக்க முடி யும்; அரசுகள் அவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்த னவே! "மகனே! எனக்கு வேறு எதுவும் வேண்டாம். நம்மு டைய சொந்த ஊரான அஜாசியோ, கார்சிகாவுக்குத் தலை நகரானால் போதும்" என்று தாயார் சொல்ல, நெப்போலி