பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் இலட்சிய ஆர்வம் மங்கிவிடுகிறது; மறைந்தே கூடப் போய் விடுகிறது. ஆனால் நெப்போலியனுக்கு அவ்விதம் இல்லை. 111 கடமை அழைக்கிறபோது, காதற் களியாட்டத்திலே ஈடுபடுவதா? என்று கேட்ட அதே போக்கில், தானே நடந்து காட்டவும் முற்பட்டான். போர் வீரனாவதற்கான பயிற் சிக் கூடத்திலே பயிலும்போது மற்ற மாணவர்கள், மலர் விழியாளைத் தேடுவதும், மது அருந்தி ஆடுவதும், கண்ண ழகியின் கருத்து என்ன? கனி, துவர்ப்பா இனிப்பா?புன் னகை போதுமா, பொன்னகை கேட்பாளா, பட்டுப்பூச் சியா? வெட்டுக்கிளியா? கட்டுக்காவல் அதிகமா? தொட்டால் ஒட்டிக் கொள்ளுமா?- என்று பேசிக் காலத்தைப் பாழாக் கிக் கொண்டிருந்தனர் -- நெப்போலியன், கோட்டை கொத்த ளங்களின் அமைப்பு, போர் முறைகளின் நுணுக்கங்கள், நாடுகளின் இயல்புகள், நாடாள்வோரின் போக்கு எனும் இவை பற்றிய ஏடுகளைப் படிப்பதிலே ஈடுபட்டுச், சிறப்பறிவு எனும் செல்வத்தைத் தேடிப்பெற்றுக் கொண்டிருந்தான். வரலாறும், பூகோளமும் நெப்போலியன் படித்துக் கொண்டி. ருப்பான்; அவனுடைய தோழர்களே வடிவழகு இயற் கையா செயற்கையா என்பது பற்றிய கருத்துக்களிலே மூழ்கு வர். கணக்குப் பாடத்திலே நெப்போலியனுக்கு மிகுந்த அக்கரை! படைத்துறைக்கு இந்தப் பயிற்சி மெத்தப் பயன் படக்கூடியது. காதலிக்கத் தெரியாதா என்றால், தெரியும்; கண்மண் தெரியாமல் அதிலே சிக்கிக் கொள்வதில்லை- வேறு கடமை யிலே ஈடுபடும்போது காதல் விளையாட்டிலே நுழைவ தில்லை. நெப்போலியன் மனதைக் கொள்ளை கொண்ட ஜோச பைன், வியக்கத்தக்க பேரழகி - விதவை --விரும்பத்தக்க சல்லாபி. அவளிடம் கட்டுண்டான் நெப்போலியன் - அவ ளைப் பற்றிப் பல்வேறு வதந்திகள் உலவின— "அந்த மதுக் கோப்பையா! சுவைமிகுதிதான்--ஆனால் எச்சிற் கலமா