பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய யிற்றே" என்று கூடப் பேசுவர். ஆனால் நெப்போலியன் கண்களுக்கு, காதற் கலையின் அழகத்தனையும் திரண்டெ ழுந்து வடிவமெடுத்து ஜோசப்பைனாக வந்ததாகத்தான் தெரிந்தது. நெப்போலியன் தன் நேரத்தையும் நினைப்பை யும், படிப்பிலேயும் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திப்பதிலே யும் ஈடுபடுத்தியதால், அவனால் குயிலுக்கும் கருங் குருவிக் கும், மயிலுக்கும் வான் கோழிக்கும், பருவமெருகுக்கும் பூச்சு மினுக்குக்கும், முகமலர்ச்சிக்கும் பாவனைச் சிரிப்புக்கும், மயக்கும் மொழிக்கும் மயக்க மொழிக்கும், தளிர்மேனிக்கும் ஆபரணத் தகத்தகாயத்துக்கும் உள்ள வேறுபாடுகளைக் கண்டறியும் கலை கற்க இயலாதிருந்தது என்று கூறலாம். வயதிலே தன்னைவிட மூத்தவள் என்றால் என்ன? வசீகரிக்கத் தெரிகிறது அவளுக்கு! எனவே நெப்போலியன் ஜோசபைனை மணமுடித்துக் கொண்டான். தீர்ந்தது அவனுடைய இலட்சியங்கள்-- திட்டங்கள் கனவெல்லாம் கலைந்தது- இனி ஒரே களம்தானே நெப் போலியனுக்கு, ஜோசபைன் மாளிகை! ஒரே ஒரு ஆணைக் குத்தான் அவன் எழுவான்—அவளுடைய புள்னகை-அடி. மூச்சுக் குரல்! போரிலே இனி ...! என்றுநான் எவரும் எண்ணிக் கொள்வர்-ஜோசபைனை அறிந்தவர்கள். 112 புலிதான்--ஆனால் சிக்கலுள்ள அரசியல் பிரச்சினைகளை எல்லாம் மறந்து விட்டு, முதுபெரும் அரசியல்வாதிகள் அந்தச் சிங்காரியின் சிரிப்பொலியிலே மயங்கிக் கிடந்திட, மாலை வேளைகளிலே அவளுடைய மாளிகையைத் தேடி வருகிறார்கள்-- நெப் போலியன் எம்மாத்திரம்! டோவ்லான் சண்டையிலே திற காட்டினான்- உண்மை-வெற்றிபெற்றான்--- உண்மைதான்—ஆனால் அவை, ஜோசபைனிடம் சிறைப் படுவதற்கு முன்பு! இனி? மையைக் நெப்போலியனுடைய பாசம் நிறைந்த பார்வையை யும் அவளுடைய பாரு மொழி கேட்டதால் சொக்கிவிட்ட தன்மையையும் கண்டவர்கள், வீரன் காதலைப் பரிசாகப் பெற்றான்! இனி அவன் காதலன் - அவ்வளவுதான்!!- என்று தீர்மானித்தனர்.