பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய செல்கிறேன் அழகு மயிலே! உன்னை அடைந்ததால் நான் பெற்ற மகிழ்ச்சியைத் துணைகொண்டு செல்கிறேன்!! வெற் றிச் செய்திகளுக்காகக் காத்திரு- உன் வேல்விழி, நான் செல் லும் பக்கம் எப்போதும் இருக்கும் என்பது அறிவேன்- நான் என் இதயத்தில், நீ அளித்த காதலைக் கருவூலமாகக் கொண்டு செல்கிறேன்!- என்று நெப்போலியன் சொல்ல முனைந்தானேயன்றி, மணமாகி இருநாட்கள் முடிந்ததும், மலரணை மறந்து களம் செல்வதா என்று கவலை கொண் டானில்லை.- இங்கு பாவை பன்னீர் தெளித்திடுகிறாள் அங்கு?-- இரத்தம் பொங்கும்! ஆம்! ஆனால் பொங்குவதுடன் என் வீரம் பொங்கும்; வெற்றி பொங்கும்; கீர்த்தி பொங்கும். தன் காதலிக்கு இந்தக் கீர்த்தியைப் பெற் றுத் துருவதைக் காட்டிலும் ஒரு காதலன் தரத்தக்க பெருமை மிகு பொருளும் உண்டா!--என்ற எண்ணம் எழுகிறது; இத்தாலி செல்கிறான். இரத்தம் நெப்போலியனுடைய உறுதிப்பாட்டுக்கு இது போன்ற எடுத்துக்காட்டுகள் பல உள. களத்திலே கடும் போரிடும் கடமையை மறந்து வேறு எந்தச் செயலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவனல்ல, இளமைப் பருவத்திலேயே, இந்த இணையிலா வீரன். 114 ! 1796ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் நாள் திருமணம் 12ஆம் நாள் இத்தாலி நோக்கிப் பாய்கிறான். ஜோசபைன் வயது சிறிது அதிகமல்லவா? நெப்போலியன், அவளைவிட இளையவன் --- நிச்சய மாக.! இவ்விதம் பேசுவது தெரியும் இருவருக்கும். எனவே பதிவாளரிடம் சென்று திருமணத்தை நடத்திக் கொண்ட பொழுது, நெப்போலியன் தன் வயதை ஒன்றரை ஆண்டு கூட்டி அதிகமாக்கிச் சொன்னான்— ஜோசபைன்? தன் உண்மை வயதிலே நான்கு ஆண்டு குறைத்து, கணக்குக் கொடுத்தாள். வயது பொருத்தம் கிடைத்துவிட்டது. திருமணத்துக்கு! இருமனம் ஒன்றான பிறகு திருமணம்