பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் தானே! பொருளற்ற கேள்விகள் எழுப்புகிறார்கள்—வயது என்ன? என்று? வயதாம் வயது! எனக்கு அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ள வயது! வேறு என்ன தெரிய வேண்டும்?- சாகசப் பேச்சிலே திறமைமிக்க ஜோசபைனால் இதுபோலெல்லாம் பேசவா முடியாது. ஆனால், நெப்போலி யன் அவளைத் திருமணம் செய்துகொண்டபோது, ஜோசபை னுக்கு, ஒரு மகன்—ஒரு மகள்! மகனுக்கு வயது பன்னிரண்டு! மகனைத்தான் நெப்போலியன் முதலிலே கண்டான்- அவ னுடைய பேச்சும் போக்கும் மிகவும் பிடித்தது. பிறகு அவள் வந்தாள்- நன்றி கூற. . 115 நெப்போலியன், தன் திறமையை டோவ்லான் களத் திலே காட்டிய பிறகு, பிரான்சு ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டு வந்த குழுவினருக்கு, நெப்போலியன் மீது ஒரு பற்று; நம்பிக்கை. ஆட்சிக் குழுவினருக்கு பாரிஸ் நகர மக்களிலே ஒரு சாரார் எதிர்ப்பு மூட்டியபோது, நெப்போலியன், ஆட்சி மன்றத்துப் பாதுகாப்புப் பொறுப்பு ஏற்று, ஆபத்தை முறி யடித்தான். எதிர்ப்பாளர்களைத் தாக்கி விரட்டி அடித்து. ஆட்சிக் குழுவினருக்கு நம்பிக்கை மேலும் வளர்ந்தது. அந்தப் படைப் பிரிவுக்கு நெப்போலியனைத் தளபதியாக்கினர். எந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டாலும், அக்கரை காட்டித் திறம்படப் பணியாற்றுவது நெப்போலியனுடைய இயல்பல்லவா? அந்த இயல்பின்படி, குடிமக்களிடம் இருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்தால்தான், கலக உணர்ச்சி ஏற்படும்போது தாக்குதலில் ஈடுபடாமலிருப்பார்கள் என்று தீர்மானித்தான்---ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்படிப் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களிலே, சீமான் ஒருவனுடைய வாளும் ஒன்று. ஒருநாள், அவசரமாகத் தன்னைப் பார்க்க விரு ம்புகி றான் ஒரு இளைஞன் என்று நெப்போலியனுக்கு அறிவிக்கப் பட்டது. < "இளைஞனா? என்னைக் காணவா?" 'ஆமாம், பன்னிரண்டு வயது இருக்கும்.'