பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய பன்னிரண்டு வயதுப் பொடியனா! என்ன வேலை அவனுக்கு, என்னிடம்...? "கூற மறுக்கிறான்; நேரிலே கண்டுதான் கூறுவானாம்.' நெப்போலியன் அந்தப் பன்னிரண்டு வயதினனை விரட்டிளிடவில்லை; வரச்சொன்னான், தன்னைக் காண. "என்ன வேலையாக... 'ஒரு வேண்டுகோள்... தாங்கள் பலருடைய ஆயு தங்களைப் பறிமுதல் செய்தீர்கள்..." .. 'ஆயுதம் ஏந்தும் வயதினனல்லளே,நீ..." "என்னுடையது அல்ல! என் தந்தையின் வாள் பறி முதல் செய்யப்பட்டுவிட்டது." "அரசுப் பாதுகாப்புக்கான நடவடிக்கை. உன் தகப் பனார், யார்... அவர் எங்கே... 116 >* "அவர் இறந்துவிட்டார். கொல்லப்பட்டுவிட்டார்... புரட்சியின்போது, வாள், எம்மிடம் இருந்தது. குடும்பத் தின் பெருமைப் பொருளாக... 'குடும்பப் பெருமையிலே அவ்வளவு விருப்பமா “நியாயமற்ற உணர்ச்சி அல்லவே..." "கூர்மையான புத்தி உனக்கு...' வாள், திருப்பித் தரப்பட்டது; மகிழ்ச்சியுடன் அத னைப் பெற்றுக் கொண்டு சென்றான், பன்னிரண்டு வயதி னன். எத்தனையோ விந்தையான சம்பவங்களிலே இது ஒன்று என்று எண்ணினான், நெப்போலியன் -- இல்லை- அது தொடர்கதையா: கிளிட்டது. "தங்களைக் காண ஒரு மாது.." "என்னைக் காண ஒரு மாதா...?" “ஒரு சீமாட்டி "சீமாட்டிக்கு இங்கு என்ன வேலை? என்னிடம். "தங்களுக்கு நன்றி தெரிவிக்க வந்திருக்கிறார்கள்..." "எதற்கு நன்றி... புரியவில்லையே ...” 'பறிமுதல் செய்த வாளைத் திருப்பித் தந்தீர்களே...' 'ஆமாம்; உணர்ச்சிமிக்க பன்னிரண்டு வயதினன்... 'அவனுடைய தாயார்-வந்திருக்கும் சீமாட்டி.” 'அப்படியா! வரச் சொல்லு.'