பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் 121 கார்சிகா விடுதலைக்காக இளமைப் பருவத்திலே ஈடுபட்டபோது, பிரான்சுப் படையின் தாக்குதலால், நெப்போலியனுக்கு ஆபத்து ஏற்பட இருந்தது; ஆனால் தப்பித்துக் கொண்டான், பிரபு வம்சத்திலே பிறந்து, ஏழ்மையில் உழலும் குடும் பத்தினருக்கு இலவசமாகக் கல்வி கற்பித்துத் தரும் முறை பிரான்சு நாட்டிலே இருந்ததால், நெப்போலியன், கல்விக் கூடம்: சென்றிட முடிந்தது. ஓயாமல் படிப்பதும், சிந்திப்பது பாக இருந்துவந்த நெப்போலியன், முதல் மாணவனாக இல்லை என்றாலும், குறிப்பிடத்தக்க இடம் பெற்ற மாணவ னானான்.விடியற்காலை நான்கு மணிக்குத் துயிலெழுவதும், மற்ற எந்த அலுவலிலும் அதிக காலத்தைச் செலவிடாமல், படிப்பிலேயே கவனம் செலுத்துவதுமாக இருந்து வந்த நெப்போலியனைக் கண்டவர்கள், அப்போதே இவன் உள்ளம் ஒரு எரிமலையாகி ஒரு காலத்தில் நெருப்பைக் கக்கும் என்று கூறினர். நாளைக்கு ஒரு வேளைதான் உணவு! வாரத்துக்கு ஒருமுறைதான் உடை மாற்றுவது! கேளிக்கைக்கு நேரமும் கிடையாது. வசதியும் கிடையாது. 'ஏழை என்பதால் ஏளனம் செய்கிறார்கள்-- இதைத் தாங்கித் தத்தளிக்க வேண்டி இருக்கிறது' என்று பாரிசில் இருந்து ஊருக்கு நெப்போலியன் கடிதம் எழுதுவான்'. 'என்ன கஷ்டம் ஏற்படினும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத் துக்கொள் மகனே!' என்பாள் அன்னை. மிகச் சிறு வயதி லேயே பொறுப்பை மிக நன்றாக உணர்ந்திருந்தான், பல பெரிய பொறுப்புக்களைப் பிற்காலத்திலே ஏற்று நடத்த வேண்டிய நெப்போலியன். படிப்பது என்றால், மேலெழுந்தவாரியாக அல்ல-- மிகுந்த அக்கரையுடன்--ஒன்றுவிடாமல் படிப்பதும், குறிப்பு கள் எழுதுவதுமான முறையில் படித்துவந்தான்; பல அரிய ஏடுகளிலே இருந்து குறிப்புக்களை எடுத்துத் தொகுத்து எழுதி வைத்துக்கொண்டான்.