பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இரத்தம் பொங்கிய விந்தை நிறைந்த ஒரு செய்தி உளது, நெப்போலியன் படித்து எழுதிவைத்த குறிப்பேடுகளிலே கடைசிக் குறிப்பேட் டில்! கடைசியாக அவன் எழுதி இருப்பது எலினா தீவு பற்றிய தகவலைத்தான். அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள சிறு தீவு, செயின்ட் எலினா. பிரிட்டிஷாருடையது!! எந்த எலினா தீவு பற்றி, மாணவன் நெப்போலியன் குறிப்பேட்டிலே எழுதிவைத்தானோ, அதே தீவுதான், நெப் போலியனுக்குச் சிறைக்கூடமாயிற்று; கல்லறை பூமியுமா யிற்று. இருபதாண்டு நிரம்பப் பெற்ற நிலையிலேயே, நெப் போலியனுக்கு, கார்சிகாவை விடுதலை அடையச் செய்ய வேண்டும் என்பதற்கான செயலில் ஈடுபடும் துணிவு ஏற் பட்டுவிட்டது. பிரான்சு நாடு, புரட்சியை வெற்றிகரமாக நடாத்தி, நிறுத்திக் முடிதரித்த மன்னனை வெட்டுப்பாறையில் கொன்றுவிட்டதுடன், குடி அரசு நாடாகி, கோல் காட்டுபவ னுக்கெல்லாம் அஞ்சிக் கிடந்த சாமான்யர்களே கொற்றம் நடாத்தும் நிலைபெற்றிடச் செய்தது. இதுவே, கார்சிகா விடுதலைக்கு ஏற்ற சமயம் என்று கருதிய நெப்போலியன், 1789-செப்டம்பர் திங்கள் பள்ளி விடுமுறையின்போது, தீவு சென்று விடுதலைப் படையின ருடன் கூடிப் பணியாற்றினான்- வெற்றி கிட்டவில்லை. பிரான்சுக்கு எதிராகப் புரட்சி நடத்தியதற்காக, பிடித்திழுத் துச் சென்று சிறையில் அடைத்திடுவர் என்று பேசிக் கொள் ளப்பட்டது; ஆனால் அதற்கு இடம் கொடுக்காத முறையில், நெப்போலியன் பாரிஸ் திரும்பிவிட்டான். முதல் முயற்சியில் தோல்வி - காதலிலும் களத்திலும்! திரும்பவும் பாரிஸ் நகர் வந்தபோது, நெப்போலியனு டன் தம்பி லூயியும் வந்தான். இருவரிடமும் சேர்ந்து இருந் தது 85 (பிராங்குகள்) வெள்ளி நாணயங்கள்! பாரிசில், எவ் வளவு சிக்கனமான வாழ்க்கை நடத்தினாலும், கடன்படாமல் இருக்க முடியவில்லை. கைக் கடிகாரத்தைக்கூட அடகு வைத்