பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் துச் செலவுக்குப் பணம் தேடவேண்டியதாயிற்று. பிறகோர் நாள், பல்வேறு அரசுகளிலே இருந்த செல்வக் களஞ்சியங் களின் திறவுகோலுக்கு உரிமையாளனாகும் உயரிடம் பெற் றான் நெப்போலியன். கார்சிகா விடுதலைக்காகப் பாடுபடுபவர் என்பதால் எந்தப் பாயோலி என்பாரிடம், நெப்போலியன் மெத்த மதிப்பு வைத்திருந்தானோ, அதே தளபதியை நேரில் கண்டு, பழகி, உரையாடி, உள்ளப் பாங்கைத் தெரிந்து கொண்ட பிறகு, மதிப்பு மங்கிவிட்டது- மிகச்சாதாரண ஆசாமி! விடுதலைக் கான போம் நடாத்தும் திறமையுள்ளவரல்ல என்ற எண் ணம் ஏற்பட்டது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமை பகைமூளும் அளவு வளர்ந்தது; ஊரார் பாயோலி பக்கம். எனவே நெப்போலியனுடைய வீட்டைத் தாக்கக் கிளம்பி ஆத்திரம் கொண்ட மக்கள்- கொள்ளையும் அடித் தனர்-- தலை தப்பினால் போதும் என்று நெப்போலியன் குடும்பத்தாருடன் ஓடி ஒளிய நேரிட்டது. னர், 123 . பாரிசில், இந்த நிகழ்ச்சி நெப்போலியனுக்குச் சாதக மான நிலையை உண்டாக்கிற்று. கார்சிகாக்காரனாக இருந் தாலும், நெப்போலியன் குடியாட்சி கண்ட புரட்சி இயக் கத்திடம் பற்று மிகக் கொண்டவன், அதனால்தான்.பிரான்சு சார்பில் நின்று பாயோலியை எதிர்த்திருக்கிறான் என்று, பிரான்சிலே அரசு நடத்துவோர் எண்ணிக் கொண்டனர். புதிய ஆதரவு கிடைத்தி! இந்த எண்ணம் பயன்படுவது கண்டு, நெப்போலியன் தன் பழைய கருத்தை பிரான்சிடம் கொண்டிருந்து பகை உணர்ச்சியைக்கூட மாற்றிக் கொண் டான். . . . பாயோவியை எதிர்க்க, நெப்போலியனையே ஒரு படைப் பிரிவுக்குத் தலைவனாக்குகிறது பிரான்சு அரசு. எந்தக் கார்சிகாவின் விடுதலைக்காகச் சீறிப் போரிட் டானோ, அதே கார்சிகாவில் பிரான்சு ஆதிக்கம் நிலைத்திட அதே நெப்போலியன், எந்தப் பாயோலியை விடுதலை வீரர் என்று கொண்டாடி வந்தானோ அதே தளபதியை எதிர்த் துப் போரிட முனைந்தான்.